பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 207

உமது இதயத்தில் உறைந்துள்ளது. நீர் இன்னும் பரிசுத்த மடையவில்லை; தரும மார்க்கத்தை நீர் இன்னும் மேற் கொள்ளவில்லை!’ என்று கூறினார்.

‘உடனே காசியபரின் உள்ளம் திருந்தியது. பொறாமை மறைந்தது. பகவரின் பொன்னடிகளைப் போற்றி வணங்கி நின்று ‘ஐயனே, எனக்கும் அறவுரை புகன்று, என்னை ஆட்கொள்ள வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார்

பகவர் முதலில் அவர் தம் அடியார்களைக் கலந்து கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார். காசியபரின் கருத்தை அறிந்த அவரது சீடர்கள், ‘நாங்களும் சாக்கிய முனிவரைச் சரணடைய வேண்டும் என்றே ஆர்வம் கொண்டுள்ளோம். தாங்கள் அவருடைய சங்கத்தில் சேர்ந்ததும். நாங்களும் சேர்கிறோம்!’ என்று சொன்னார்கள்.

அக்கினி காசியபரும், அவருடைய அடியார்களும், அக்கினி வழிபாட்டுக்கு உரிய தங்கள் சாமக்கிரியைகளை யெல்லாம் ஆற்றிலே மிதக்க விட்டு விட்டுப் போதி வேந்தரிடம் சென்று, சங்கத்திலே சேர்ந்து பிக்குக்களாயினர்.

அக்கினி காசியபருடைய சகோதரர்களான நதீ காசியபரும், கயை காசியபரும் நதியிலே மிதந்து வந்த சாமக்கிரியைகளைக் கண்டு, தங்கள் சகோதரருக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்று, அவர் தவப் பள்ளிக்குச் சென்று பார்த்தனர். அவரும் சீடர்களும் மஞ்சள் உடை பூண்டு பௌத்த தருமத்தை மேற்கொண்டிருந்த்தைர் கண்டு, தாங்களும் அவ்வாறே அவ்வறத்தைத் தழுவினக். அவர்களுடைய அடியார்களும் தங்கள் தலைவர்களைப் பின்பற்றினர். இவ்வாறு புத்தரைச் சுற்றி ஒரே சமயத்தில்