பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 ⚫ போதி மாதவன்

பெருமானுடன் தங்கியிருக்கும் காலங்களில், அவரே அறைகளையெல்லாம் சுத்தம் செய்து, பானைகளிலே நீர் ஊற்றிவைத்து, நோயாளருக்குச் சிகிச்சை செய்வது வழக்கம். பிற்காலத்தில் அவரே பல நகரங்களுக்கும் சென்று, பொதுமக்களின் பெருங்கூட்டங்களில் சொற்பொழிவாற்றியும், அரசர்கள், பிரபுக்கள் தலைவர்கள் முதலியோரைச் சந்தித்து அற நிலையங்கள் அமைத்தும், எதிர்ப் பிரசாரங்களுக்கு மறுப்புக் கூறியும் அரும்பெருந் தொண்டுகள் செய்துவந்தார். ‘நான் இல்லையென்றால் என் ஸ்தானத்தில் இருக்கக்கூடியவன் சாரீபுத்திரன்!’ என்று பெருமானே அவரைப் பாராட்டியுள்ளார். இத்தகைய அருங்குணங்கள் அனைத்தும் வாய்ந்த அந்த அந்தணரே பௌத்த தருமத்தின் ‘சேனாபதி’ என்ற பட்டமும் பெற்று விளங்கினார்.

மௌத்கல்யாயனர் தருமத்தின் உட்பொருளை நன்கு. உணர்ந்துகொண்டு அதன்படி ஒழுகிவந்தவர். பிற சமயத்தார்களுக்கு அவர் பெயரைக் கேட்டாலே பயமுண்டாகும் . அவரை யாரும் எதிர்த்து வெல்ல முடியாது; பகைவர்கள் அவர்மீது பாய்ந்து சென்றாலும், அவர் அமைதியோடு உயரே பறந்து ஆகாயத்திலேயே அமர்ந்துகொள்வார். அவருக்கு அவ்வளவு இருத்தி ஆற்றல் அமைந்திருந்தது!

சாரீபுத்திரருடைய தாய்மாமனாரான கோஷ் திலாவும் சிலநாட்களுக்குப் பிறகு புத்தரைத் தரிசித்துச் சங்கத்தில் சேர்ந்துகொண்டார்.

வேணு வனத்திலே தயாவீர தருமராஜர் தங்கியிருந்த காலத்திலே அவருடைய அருட் சமயத்திற்குக் கிடைத்த மும்மணிகளில் மூன்றாமவர் காசியபர் அக்கினிதத்தர் என்பவர். அவர் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் மிக்க தபோதனர். அவர் மனைவி அருங்குணங்க-