பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 ⚫ போதி மாதவன்

புத்தர் பெருமான் அவருடைய தூய சிந்தையையும்’ வள்ளண்மையால் அவர் தருமத்தைக் கொள்ளை கொள்ளையாகச் சேர்த்து வருவதையும் அறிந்து, அவர் செய்து வருவதே உண்மையான ஈகை என்று புகழ்ந்துரைத்தார். பயன் கருதாமல், புகழை விரும்பாமல், அவர் செய்து வரும் தருமத்தால், பயனும் புகழும் பெருகி நிற்பதைச் சுட்டிக் காட்டினார்.

‘நெருப்புப் பற்றிய பொக்கிஷத்தில் மிஞ்சியிருப்பவைகளை அள்ளியெடுப்பது போல், பிறருக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும்!’ என்றும், ‘செல்வத்தைச் சேர்த்து வைக்கும் கருமி பாவத்தையே மூட்டை கட்டிச் சேர்த்து வைத்து, முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான்!’ என்றும், ‘தானம் செய்பவன் உள்ளக் களிப்புடன் அமைதி பெறுகிறான்; அவனுக்குக் கவலையு மில்லை, சஞ்சலமுமில்லை’ என்றும், அவர் ஈகையின் பெருமைகளை வியந்துரைத்தார்.

பிறகு, தமது விருந்தினரின் உள்ளம் கனிந்து பக்குவமாயிருக்கும் நிலையை அறிந்து, பகவர், ‘எல்லார்க்கும் செல்வத்தை அளிக்கும் உனக்கு நான் அருளறத்தை அளிக்கிறேன்!’ என்று சொல்லி, அவருக்ருத் தரும உபதேசம் செய்தார். நான்கு உயரிய உண்மைகள் பற்றியும், ஆசைகளை அகற்றி மனச்சாந்தி பெறும் மார்க்கம் பற்றியும் உபதேசித்து, சுவர்க்கம் கிடைப்பதாயினும் அதை விரும்பாமல், பிறவியற்ற பெருவாழ்வாகிய நிருவாண முக்தியையே நாட வேண்டும் என்று வழி காட்டினார். எல்லாம்வல்ல ஆண்டவன் உலகையும் உயிர்களையும் படைத்து விட்டார் என்றார், உலகும் உயிர்களும் செய்யும் செயல்களுக்கும், அனுபவிக்கும் துயர்களுக்கும் அவனே பொறுப்பாளியாகிறான் என்றும், அதனால் தனி மனிதர்கள் கடமையோ, ஒழுக்கமோ, முயற்சியோ இல்லாமல், ‘எல்லாம் அவன் செயல்!’ என்று