பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 ⚫ போதி மாதவன்

சம்சார சக்கரத்தில் சிக்குண்டு கிடந்தால், விமோசனமில்லை; வேதனையே மிஞ்சும்.

‘நீங்கள் கட்டுண்ட அடிமைகள் அல்லர்! உறுதியாக மனம் வைத்தால், நீங்கள் சக்கரச் சுழலிலிருந்து வெளியாகி, நீங்காத இன்பத்தை யடையலாம்; நல்லன யாவும் மேலும் நன்மை யாவும் மேலும் நன்மைகளாகவே முடியும்.

‘புத்தராகிய நானும் புவனத்து மக்களின் துயரையெல்லாம் எண்ணிக் கண்ணீர் சிந்தினேன்; ஆனால் இப்போது இன்புற்று நிற்கிறேன்! ஏனெனில் யாவர்க்கும் விடுதலை நிச்சயம்–நான் அதைப் பெற்றுவிட்டேன்!

‘துயரப்படும் மக்களே! ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் துயரங்களுக்குக் காரணம் நீங்களே! ஜனன மரணச் சக்கரத்தில் உங்களை மாட்டி வைத்து, அதன் ஆயக்கால்களை நீங்கள் ஆர்வத்தோடு பற்றிக்கொண்டு வேதனைப்படும் படி வெளியேயுள்ள எவரும் செய்யவில்லை.

‘எது தப்பினாலும் தருமம் தப்புவதில்லை ! நன்மையைச் செய்தால் நல்லதே விளையும்: தீமையைச் செய்தால் தீமையே விளையும்.

‘தருமத்திற்குக் கோபமில்லை; மன்னிக்கும் இயல்பும், கிடையாது; செய்த வினையின் பயன் இன்றோ, நாளையோ, விளைந்தே தீரும்.

‘எனவே, கொலைஞன் தனது கூரிய வாளால் வேறொன்றைக் கோறுவதில்லை,[1] தன்னையே


  1. கோறல்- கொல்லுதல்