பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 ⚫ போதி மாதவன்

வடையும் என்பதையும் பகவர் அந்தச் சூத்திரத்திலே அமைத்துக் கூறியுள்ளார்.

பகவர் அவன் இருந்த விகாரைக்குச் சென்று அவனை ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து தம் பாதங்களைக் கழுவும்படி கூறினார். அவன் அவ்வாறே செய்தான். அழுக்கு நீர் இருந்த பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, ‘இதிலுள்ள தண்ணீர் குடிக்கத்தக்கதா?” என்று பகவர் கேட்டார். ‘இல்லை!’ என்றான் இராகுலன்.

அப்போது பகவர் சொன்னார் : ‘உன் விஷயத்தை இப்பொழுது எண்ணிப் பார்! நீ என் குமாரனாயிருந்தும், ஒரு மன்னரின் பேரனாயிருந்தும், தானாக யாவற்றையும் துறந்த சிரமணனாயிருந்தும், உன் உள்ளம் அசுத்தமாகாதபடி உன் நாவைப் பொய்யுரையிலிருந்து காத்துக்கொள்ள உன்னால் முடியவில்லையே!’

தண்ணீரை வெளியே கொட்டிய பிறகு, பகவர் மீண்டும், ‘இந்தப் பாத்திரம் குடி தண்ணீர் வைக்கத் தகுதி யுள்ளதா?’ என்று கேட்டார்.

‘இல்லை , பகவரே, பாத்திரமும் அசுத்தமாகி விட்டது!’ என்றான் இராகுலன்.

அப்போது பகவர் சொன்னார் : ‘உன் விஷயததை இப்பொழுது எண்ணிப்பார்! நீ சீவர ஆடை அணிந்திருப்பினும், நீ இந்தப் பாத்திரத்தைப் போல, அசுத்தமாகி விட்டபின், உயர்ந்த காரியம் எதற்கும் நீ தகுதி யுள்ளவனா?’

பிறகு காலிப் பாத்திரத்தைக் கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, பகவர் அதை வேகமாகச் சுழற்றிக் கொண்டிருந்தார். ‘இது கீழே விழுந்து உடைந்துவிடுமே