பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258 ⚫ போதி மாதவன்

னிடம் கலந்து பேசினான். மேற்கொண்டு அந்த யானை போருக்கு ஏற்றதன்று என்று அவ்விருவரும் முடிவு செய்தனர்!

‘இராகுலா! மனிதர்கள் மட்டும் தங்கள் நாக்குக் களைக் காத்துக் கொண்டால் போதும்; எல்லாம் நலமாக முடியும்! போர் புரியும் யானை தன் துதிக்கையில் அம்பு பாயாமல் கவனித்துக் கொள்வதுபோல், நீயும் உன்னைக் காத்துக் கொள்வாயாக!

‘சத்தியத்தின் மீதுள்ள அன்பினால் உண்மையானவர்கள் நீதி முறையில் வழுவாமல் நிற்கின்றனர். நன்கு பழக்கப்பெற்று அமைதியாயிருக்கும் யானை தனது துதிக்கையை மிதித்துக்கொண்டு மன்னர் ஏறுவதற்கு இணங்கி அடக்கமாயிருக்கும். அதைப்போல், நீதி ஒழுக்கத்தைப் பேணும் மனிதனும், தன் வாழ்வு முழுவதும் அடக்கத்துடன் நேர்மையாகக் கழித்துவிடுவான்.’

இந்தச் சொற்களைக் கேட்ட இராகுலனுக்கு ஆழ்ந்த துக்கமுண்டாயிற்று. இதன் பிறகு அவன், குறைகூறவே இடம் இல்லாதபடி, ஆர்வத்தோடு முயற்சி செய்து, புனித வாழ்வு வாழ்ந்து வரலானான்.

தந்தன்

சுத்தோதன மன்னரின் இரண்டாவது மைந்தரின் பெயர் நந்தன். மகாராணி கௌதமி சித்தார்த்தரைக் குழந்தைப் பருவத்தில் எடுத்து வளர்த்த பின்பு பெற்ற குலக்கொழுந்து அவன். சித்தார்த்தர் வனம் புகுந்த பின்பு, யாவரும் அவனையே இளவரசாகக் கருதிவந்தனர். அழகிலே அவன் மன்மதனைப் போலிருந்ததால் அவனுக்குச் சுந்தர-நந்தன் என்று பெயர் வந்தது. புத்தர் பெருமான் கபிலையம்பதியில் தங்கியிருக்கும்போதே அவனுக்குத்