பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288 ⚫ போதி மாதவன்

லிருந்து தப்புவதற்கு உண்மையான தருமத்தை அறிந்து பின்பற்றுதல் ஒன்றே வழியாகும்.

‘அறிவு பெற்றவர் அனைவரும் உடல் இன்பங்களை ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களுடைய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காகக் காமங்களை வெறுத்துத் தள்ளுகின்றனர்.

‘மரம் தீப்பற்றி எரியும்போது புள்ளினங்கள் அதன் மீது குடியிருக்க முடியுமா? ஆசைகளால் ஏற்படும் சித்த விகாரமுள்ள இடத்திலே சத்தியம் தங்கியிருக்க முடியாது. இதையறியாத கல்வி மானைப் பெரிய முனி என்று பாராட்டினால், அவன் பேதையேயாவான்.

‘இதை அறிந்தவனுக்கு ஞானம் உதயமா கின்றது. இந்த ஞானத்தைப் பெறுவது ஒன்றே உயர்ந்த இலட்சியம். இதை அலட்சியம் செய்து விட்டுவிட்டால், வாழ்வே பயனற்றுப் போகும்.

‘எல்லாச் சமயங்களின் போதனைகளும் இதையே கேந்திர நிலையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில் இது இல்லையென்றால், பகுத்தறிவே இல்லாமற் போகும்.

இந்த உண்மை துறவிக்காக மட்டும் ஏற்பட்டதன்று; துறவி, இல்வாழ்வோன் ஆகிய ஒவ்வொரு மனிதனுக்கும் இது அவசியம். துறவிக்கும் கிரகத்தனுக்கும் பேதமில்லை. துறவிகளிலே வழுக்கி விழுந்து பாழாய்ப் போவோரும் உளர். இல்வாழ்வோரிலே முனிவர்கள் நிலைக்கு உயர்வோரும் இருக்கின்றனர்.