பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜேத வனம் ⚫ 291

கொண்டு விளங்கினார் என்றும், வேறு சில சித்துக்களும் செய்து காட்டினார் என்றும் சொல்லப்படுகின்றது. காழ்ப்புக் கொண்ட சமயவாதிகள், அவற்றைக் கண்டு மனம் திருந்தி, ஐயனைச் சரணடைந்தனராம். பிரசேனஜித்தும் பௌத்த தருமத்தை மேற்கொண்டு ஒழுகி வந்தார்.

புத்த தரிசனத்திற்கு முன்னால் பிரசேனஜித்து உணவில் கட்டுப்பாடின்றி அறுசுவை உணவுகளை அதிகமாக உண்டு வந்தார். அதனால் அவருக்குப் பகலிலேயும் உறக்கமும் மயக்கமும் இருந்து கொண்டிருந்தன. ஒரு சமயம் அவர் ஜேதவன விகாரையில் பகவர் முன்னிலையில் இருக்கும் போதே அவருக்கு உறக்க மயக்கம் ஏற்பட்டது. அதைக் கண்ட பிறவிப்பிணி மருத்துவராகிய பகவர், அதற்குக் காரணம் பேருண்டி என்பதை அறிந்து அளவறிந்து உண்ண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்தார். மாறுபாடில்லாத நல்லுணவை அளவோடு உண்டு வந்தால், சோம்பலும், தூக்கமும் விலகிவிடும் என்றும், பெருந்தீனியே உயிருக்கு ஊறுபாடு என்றும் விளக்கிச் சொன்னார். உணவு மிகவும் குறைந்தால் உடலின் சக்தியும் குறையும்; ஆனால் உணவு அதிகமானால் அசதியும் சோம்பலும் தோன்றி, ஊக்கமே ஒழிந்து விடும். இதனாலேயே பகவர் தமது தம்பியாகிய நந்தனுக்குப் பிக்குக்களின் ஒழுக்கத்தைக் கற்பிக்கும்போது, ‘பகைவன், உயிரோடு மட்டும் இருப்பதற்கு ஒருவன் உணவளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், எவ்வளவு அளிப்பானோ, அவ்வளவே ஒருவன் தானாகத் தன் உடலுக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறியதாக அசுவகோஷர் குறித்துள்ளார்.

பெருமான் உணவு பற்றிப் பேசுகையில் மன்னரின் மருமகனான சுதர்சன குமாரன் அவர்களுடன் இருந்தான். பெருமான் அவனைப் பார்த்து, அரசர் உணவருந்தும்