பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 301

மகிழ்ச்சியிலிருந்து எனக்குச் சாந்தம் பிறக்கும். சாந்தியிலிருந்து நல்ல ஞானம் கிடைக்கும்!’ என்றாள் விசாகை.

ஐயன் அளவற்ற சந்தோஷமடைந்தார். ‘பாத்திரம் அறிந்து, நல்லோர்களுக்குச் செய்யும் உதவி நல்ல நிலத்தில் விதைக்கப்பெற்ற விதைகளைப்போல் ஏராளமாக விளைவளிக்கும்; உணர்ச்சிகளின் வசப்பட்டு உழல்வோர்களுக்குச் செய்யும் உதவி கரம்பில் விதைக்கப்பெற்ற விதைகளை போலப் பயனற்றுப் போகும்; அவர்களுடைய உணர்ச்சிகளே, புண்ணியங்களை வளர விடாமல் அழித்து விடும்!’ என்று அவர் கூறினார்.

விசாகை பின்னால் நெடுநாள் ஜீவித்திருந்தாள். இருபது ஆண்டுகளில் அவளுக்குப் பத்து ஆண் மக்களும், பத்துப் பெண்களும் பிறந்தார்கள் என்றும், பின்னால் அவர்களுக்கும் ஏராளமான குழந்தைகள் இருந்தன என்றும், அவளைப் பற்றிய கதைகளில் கூறப்பட்டிருக்கிறது. கடைசியில் அவளுக்குக் கொள்ளுப் பேரர்களும், பேர்த்திமார்களுமாக மொத்தம் எண்ணாயிரம் பேர்கள் இருந்தனராம்! மற்றப் புராணக் கதைகளைப் போலவே பௌத்தக் கதைகளிலும் எண்ணிக்கையில் குறைவே இருப்பதில்லை!

பூர்வாராமம்

விசாகை அம்மையின் கிழக்கு ஆராமத்தில் புத்தர் பெருமான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சமயம் உபவாஸத நாளன்று[1] இரவில் பிக்குக்கள் அனைவரும் வந்து


  1. ஒவ்வொரு பட்சத்திலும் முதல்நாளும் எட்டாவது நாளும் ஆக, மாதத்தில் நான்கு நாட்கள் பிக்குக்களுக்கு உபவாஸத நாட்களாம். அந்த நாட்களில் புத்தர் பெருமான் பிக்குக்களின் ஒழுக்க விதிகள் பற்றி அருளிய