பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 323

‘ஓ பிக்குக்களே! - பெருங்கடலிலே பூதாகாரமான உடல்கள் அமைந்த பெரிய ஜந்துக்கள் (பல்லாயிரம் அடி நீளமுள்ளவை) இருக்கின்றன. அதேபோல, இந்தத் தருமத்தையும் விநயத்தையும் கடைப்பிடித்து வரும் மாபெரும் மனிதர்கள் இருக்கின்றனர்; அவர்களிலே முதற்பாதையில் இறங்கியுள்ளவன் (சோதாபன்னன்), அதன் பயனை அடைந்தவன் (சக்குத காமின்), மூன்றாவது பாதையில் இறங்கியுள்ளவன் (அநாகமின்), அதன் பயனை அடைந்தவன் (அருகத்து), அருகத்து நிலையின் பயனை அடைந்தவன் ஆகியோர் அடங்கியுள்ளனர். இது எட்டாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! இந்தத் தருமத்திலும், விநயத்திலுமுள்ள அதிசயிக்கத்தக்க அபூர்வமான எட்டுக் குணங்களும் இவை. இவற்றை இடை விடாது உணர்ந்து பிக்குக்கள் இவற்றிலே இன்புறுகின்றனர்.’


    ஐந்து பலங்கள்: மனத்தின் ௸ அங்கங்களுக்குள்ள ஐந்து ஆற்றல்கள்.
    ஏழு போத்தியாங்கங்கள்: மெய்ஞ்ஞானத்திற்குவேண்டிய கருவிகள்: சாமர்த்தியம், ஞாபக சக்தி, வீரியம் (விடா முயற்சி). உள்ளக்களிப்பு, சாந்தி, சமாதி, சமதிருஷ்டி ஆகிய ஏழு.
    அஷ்டாங்க மார்க்கம்: நற்காட்சி முதலிய எட்டுப் படிகளுள்ள நிருவாண வழி.