பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 29

ஒரு முறை உலகில் மலரும் ஒண்மலரான உதம்பர மலர் இது! இந்த ஞாலமெல்லாம் இதன் ஞானத்தால் நறுமணங் கமழும்!’

மாமுனி கூறிய மாற்றங்களால் மன்னர் மகிழ்ச்சியும் துயர முங் கொண்டார். மைந்தனின் பெருமைகளைக் கேட்கும்போது அவர் உவகையடைந்தார். ஆனால், அவனியெங்கும் அறத்தின் அரசனாய்ப் போதனை செய்வான் என்றதைக் கேட்டதும் மைந்தன் நாட்டைத் துறந்துவிடுவானோ என்று வருந்தினார். எனினும், ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டு, மணிமாலைகள் முதலிய மதிப்புயர்ந்த அணிகள் பலவற்றை முனிவருக்குக் காணிக்கையாக வைத்து வணங்கினார். முனிவர் அந்த ஆபரணங்களை அப்படியே குழந்தைக்குக் காணிக்கையாக வைத்து, ‘மகுடபதி! நீ என் ஏற்றங்கருதி அளித்த பொருள்கள், என்னினும் ஏற்றமுள்ள இடத்திலே சேர்ந்துவிட்டன!’ என்று சொல்லிவிட்டு, அரிதில் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

குழந்தைக்குச் ‘சர்வார்த்த சித்தன்’ (விரும்பியதை யெல்லாம் பெற்றவன்) என்று பெயர் வைக்கப் பெற்றது.. பிறந்த அன்றே பெறவேண்டிய திருவனைத்தும் பெற் றிருந்ததால், சுத்தோதனர் இப்பெயரையே விரும்பிச் சூட்டினார். ஆயினும் இந்தப் பெயர் சுருக்கமாகச் ‘சித்தார்த்தன்’ என்றே கூறப்பட்டு வந்தது. சரித்திரத்திலும் சித்தார்த்தன் என்பதே நிலைத்துவிட்டது.

வேதியர் பலர் வந்து ஜாதகம் கணித்துச் சோதிடம் பார்த்துச் சொன்னார்கள். சித்தார்த்தன் முப்பத்திரண்டு சாமுத்திரிகா லட்சணங்களையும் ஒருங்கே பெற்றிருப்பதால், அவன் பருவமடைந்து பெரியவனாகும்போது குடும்பத்தோடு அரண்மனையில் தங்கியிருந்தால், அகிலத்தை ஆளும் சக்கரவர்த்தியாய்த் திகழ்வானென்றும், உலக இன்பங்களை உதறித் தள்ளி வெளியேறி விட்டால்,