பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினேழாம் இயல்

இருபது வருட யாத்திரைகள்

‘அருள் நெறியால் பாரமிதை
ஆறைந்தும் உடனடக்கிப்
பொருள் முழுதும் போதியின்கீழ்
முழுதுணர்ந்த முனிவரன்தன்
அருள்மொழியால் நல்வாய்மை
அறிந்தவரே பிறப்பறுப்பார்
மரு(ள்) நெறியாம் பிறநூலும்
மயக்கறுக்கு மாறுளதோ !’

–சித்தாந்தத் தொகை

போதிமா தவர் ஞானமடைந்த காலம் முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாது தருமப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இதைப் பற்றிய விவரமான சரித்திரம் இல்லாது போயினும், அவருடைய யாத்திரைகளைப் பற்றிய பல குறிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. மழைக்காலமாகிய, மூன்று மாதங்கள் மட்டும் ஒரே விகாரையில் சீடர்களோடு, தங்கியிருந்து விட்டுப் பின்னர் ஆண்டு முழுவதும் அவர் பிரயாணம் செய்து கொண்டே யிருந்தார். காசி, உருவேலா, இராஜகிருகம், கபிலை, சிராவஸ்தி முதலிய இடங்களிலும், நடுவழிகளிலிருந்த நகரங்கள், கிராமங்களிலும் பிரசாரம் செய்வதிலே முதல்