பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 ⚫ போதி மாதவன்

பும் வெறுப்பும் ஏற்படுகின்றன. விருப்பு-வெறுப்புக்களால் பற்று உண்டாகிறது. எனவே புலன்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாயிருந்து காத்து வர வேண்டும் என்பதற்குப் பெருமான் பல விதிகளையும், பயிற்சி முறைகளையும் அமைத்தார்.

சங்கத்தில் துறவிகளாகச் சேர்ந்த ஆடவர்களுக்கு மனவிகாரம் ஏற்படக்கூடிய காரணங்களில் முதன்மை யாசுக் குறிப்பிடத்தக்கது பெண் உருவம். மற்றைப் பொருள்கள் சம்பந்தமாகப் புலன்களை அடக்கியும், விருப்பு வெறுப்புக்களைக் களைந்தும் பயிற்சி பெறலாம் எனினும், பெண்ணைச் சந்தித்து அதனால் ஏற்படும் உணர்ச்சியை வெல்வதைப் பார்க்கினும், அவளைச் சந்திக்காமலே ஒதுங்கிச் சென்று விடுதல் மேலென்று புத்தர் கருதினார்[1] மனத்திற்கு எவ்வளவு பயிற்சியிருப்பினும், சில சமயங்களில் அது வழுவி விழுந்து விடக்கூடும். புத்தர் சம்பந்தப்பட்ட மட்டில், அவர் உணர்ச்சிகளை அடக்கி வென்றவர் என்பது மட்டுமன்று, அவைகளின் காரணங்களையே வேரோடு பறித்தெறிந்து விட்டவர் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்களும் அவரைப் போலவே இருக்க முடியும் என்று கருத இயலாது. ஆதலால் தான் ஆடவருக்கும் பெண்டிருக்கும் சந்திப்பே இல்லாதிருத்தல் நலம் என்று அவர் கருதினார்.

பெண்களுடன் வீண் பேச்சுப் பேசுதலை அவர் தடை செய்தார். கூடியவரை பெண்களைப் பாராமலே ஒதுங்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார், அவர்களிடம் சமயம், ஒழுக்கம் முதலிய விஷயங்களைப் பற்றிப் பேச


  1. ’........he raised the strongest barrier against the wildest passion of the heart.’
    -Rt. Rev. P. Brigandet.