பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 323

நேர்ந்தாலும், பிக்குக்கள் தூர விலகியிருந்தே பேச வேண்டும் என்றும், அவ்வாறு ஒரு பிக்கு பேசும்போது , வேறு பிக்குக்கள் சிலர் உடனிருக்க வேண்டும் என்றும் அவர் விதிகள் செய்தார். இவைகள் எல்லாம் பெண்கள் தாழ்ந்தவர், தீயோர் என்ற கருத்தால் ஏற்பட்டவை அல்ல. பண்படாத மானிட உள்ளத்தின் பலவீனங்களை அறிந்து, உணர்ச்சி வெள்ளத்தைத் தடை செய்வதற்காகப் போடப் பெற்ற அணைகளே இவை.

பௌத்த தருமத்தில் பெண்களுக்கு உயர்ந்த நிலையே அமைந்திருக்கின்றது. அவர்கள் இழிந்த பிறவிகளாகக் கருதப்படவில்லை. பிக்குக்கள் பாடிய பாடல்கள் பல ‘தேர காதை’ என்ற நூலாகவும் பிக்குணிகள் பாடிய பாடல்கள் ‘தேரி காதை’ என்ற நூலாகவும் தொகுக்கப் பெற்று, அவை பௌத்தத் திருமுறைகளோடு சேர்க்கப் பெற்றுள்ளன. பிக்குக்களிற் பால் சிறந்து விளங்கியது போலவே, பிக்குணிகளிலும் பலர் புகழ் பெற்று விளங்கி வந்தனர்.

பௌத்த சமயிகளிடையே ஆண்-பெண் உறவும், திருமணமும், தனிப்பட்டவர்களுடைய விஷயங்களாகக் கருதப்பட்டன. விவாகத்தில் ஆணும் பெண்ணும் சமமாகவே கருதப்பட்டனர். பெண்ணுக்குச் சொத்துரிமை உண்டு. அவளுடைய சொத்தில் கணவன் தலையிட முடியாது. பௌத்த சமயம் பரவியுள்ள நாடுகளில் காதலே விவாகத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றது; காதலற்றுப் போனால் விவாகரத்து அனுமதிக்கப் பெறுகின்றது. பர்மாவிலுள்ள பௌத்தப் பெண்கள் விவாகமான பின் தாலி, ஐம்படை, திருமண மோதிரம் முதலிய அடையாளங்கள் எதுவும் அணிவதில்லை.

இருத்தி ஆற்றல்கள்

புத்தர் போதியடைந்த பின் ஆறாவது ஆண்டில் இராஜகிருகத்து வேணுவனத்தில் தங்கியிருந்தார். அப்-