பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 379

சினேந்திரரின் சீரிய சொற்கள் செவிகளில் நுழைந்தவுடனே, அம்பபாலியின் மெய்யறிவு திடம் பெற்றது. அறிவின் உதவியால் அவள் ஆசைகளைத் துறக்க மடிந்தது. உள்ளத்தை விஷமாக்கும் தீய கருத்துக்கள் யாவுமே அவளை விட்டு அகன்று விட்டன. அவள் முகம் ஆனந்தத்தால் மலர்ச்சியுற்றது. அவள் எழுந்து நின்று, பகவர் பிக்குக்கருடனே நாளை எனது இல்லத்தில் பிச்சை ஏற்றுக் கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா? என்று விநயமாக வேண்டினாள். பெருமானும் தமது மௌனத்தினாலேயே அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். பிறகு அவள் அங்கிருந்து அரிதில் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினாள்.

வமியிலே வைசாலி நகரத்து லிச்சவிகள் என்ற அரச குலத்தைச் சேர்ந்த பிரபுக்களில் முக்கியமானவர்களும் அவர்களுடைய தலைவனும், ஆடம்பரமான ஆடைகளும், அணிகளும் அணிந்து, தங்களுடைய நேர்த்தியான இரதங் களிலே மாஞ்சோலையை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அம்பபாலியின் இரதம் லிச்சவித் தலைவனுடைய இரதத்திற்கு நேர் எதிராக ஓடிச் சென்றது. அப்போது அத் தலைவன், ‘அம்பபாலி, எங்களுக்கு எதிராக நீ இவ்வளவு வேகமாக இரதத்தை ஓட்டிச் செல்வதன் கருத்து என்ன!’ என்று வினவினான்.

‘பிரபுவே, புத்த பகவரையும் அவருடைய அடியார்களையும் நாளை எனது இல்லத்தில் அமுது செய்யும்படி இப்பொழுதுதான் கேட்டுக் கொண்டு திரும்புகிறேன்!’ என்று மறுமொழி கூறினாள் அம்பபாலி.

தங்களுக்கு முன்னதாக ஒரு கணிகை போதி வேந்தருக்கு விருந்தளிக்கும் பெருமையைக் கொள்வதா என்று லிச்சவிகள் மனம் புழுங்கினர். அவர்கள், ‘அம்பபாலி. இந்த விருந்தை நாங்கள் அளிக்கும்படி எங்களுக்கு விட்டுக்-