பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 ⚫ போதி மாதவன்

களையே காணவில்லை!’ என்று அவர்கள் கூறியதிலிருந்து அரசர் அதிலும் ஏதோ அதிசயம் இருப்பதை உணர்ந்தார்

அவருடைய கவலை பன்மடங்கு அதிகமாயிற்று. மேலும் மேலும் இளவரசருக்கு இன்பமளிக்கும் விஷயங்களை ஆராய்ந்து அவற்றைச் செய்து வரும்படி உத்தரவிட்டார். சௌந்தரியம் மிக்க புதிய நடனமாதர் பலரை யும் அனுப்பி வைத்தார். அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டை வாயில்களைக் கவனமாய்க் காத்து வரும்படி திறமைமிக்க காவலர் பலரையும் நியமித்தார்.

இரண்டு காட்சிகள்

சித்தார்த்தர் மீண்டும் நகரையும், பூஞ்சோலையையும் பார்த்து வர வேண்டும் என்று மன்னரிடம் வந்து விடை கேட்டார். எத்தனையோ இன்பங்கள் நிறைந்ததாகத் தோன்றும் வாழ்க்கை நதி முடிவில் காலமென்னும் பாலை மணலில் பாய்ந்து அவலமாய்ப் போகும் கதியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அவர் தம் நகர மக்களை நேரிலே சென்று பார்க்க விரும்பினார். முன்னறிவிப்பு இல்லாமல், எவ்வித ஏற்பாடுகளும் இன்றி, அவர் மாறுவேடத்திலே சுற்றிவரத் தீர்மானித்திருந்தார். அரசரும் அதற்குச் சம்மதித்தார். மறுமுறை சுற்றி வந்தால், முதல் நாள் நேர்ந்த விபரீதத்தை மாற்றிவிடக் கூடும் என்று அவர் கருதினார். மறுநாள் நண்பகலில் இளவரசரும் தேர்ப்பாகனும் வெளியே சென்று வர ஏற்பாடாயிற்று.

மறு நாள் கோட்டை வாயிலில் அரசருடைய முத்தி ரையைக் காட்டியதும் காவலர்கள் நெடுங் கதவுகளைத் திறந்து ‘வழிவிட்டனர். சித்தார்த்தர் ஒரு வணிகரின் உடை அணிந்திருந்தார். சந்தகன் வணிகரின் பணி-