பக்கம்:போராட்டம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

போராட்டம்


வணங்கி வந்தவர்கள் மாற்றம் கண்டுள்ளனர். பிதா ஏசு என்றும், அதற்காக ஒரு பைபில், வேத சாஸ்திரம், இஸ்லாம். சமூகமும் அப்படியே உருவமற்ற அரூபி எங்கும் நிறைந்த பொருள். அதற்கு உருவம் ஒன்று அவசியமில்லை என்று கூறி அதன்படி அல்லாவை வணங்கி வருகிறார்கள். அதை விளக்க ‘குர்ஆன்’ என்னும் வேத நூலும் அவர்களுக்கு உண்டு.

ஆகவே, பழைமை கடவுள் மாற்றப்பட்டு புதுவழிகண்டு தெய்வ வழிபாட்டைச் செய்து வரும் மற்றவர்களைப் போல் நாமும், நமது அறிவு ஆராய்ச்சிக்குட்பட்ட கடவுள் வழிபாடு இருக்க வேண்டாமா? மார்க்கத்தில் மறு மலர்ச்சிக் காண வேண்டாமா? கண்டு அதன்படி நடக்கும்படி கூறுவதுதான் அறிவுடைமை.

அறிவு பிரசாரத்தை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். மதம், கடவுளுக்கு ஆபத்து தந்து விடுவதாகக் கூறினார்கள். ஆனால், எனது அரும் பெரும் தலைவர் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பே, அறிவு பிரசாரத்தைச் செய்து வந்தார். அதற்காக சுயமரியாதை இயக்கத்தையும் கண்டார், இந்த இயக்கம் இன்றுவரை இருந்து வருகிறது.

அதன் பிரதிபலிப்பே நான், அவர் காட்டிய வழி நின்று தொண்டாற்றி வருகிறேன். அறிவுத்துறையில் மட்டும்மல்ல, கலைத் துறையிலும் அவர் எனக்கு குரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/10&oldid=1771203" இலிருந்து மீள்விக்கப்பட்டது