அறிஞர் அண்ணா
11
ஈரோட்டில் அவருடைய தலைமையில் சந்திரோதயம் என்ற நாடகம் நடைபெற்றது. அதில் நானும் மற்றவர்களும் நடித்தோம், என்னை மேடையில் பாராட்டிப் பேசிய பல பதங்கள் என் ஞாபகத்திற்கு வருகிறது.
பல மாநாடுகளைக் கூட்டி பேசுவதை விட ஒரு நாடகம் நடத்தி மக்களை, மாற்றலாம் போலிருக்கிறதே. நீங்கள் இவ்வளவு அழகாக நடிப்பீர்கள் என்று நான் நினைக்க வில்லையே, என்று கூறியது மட்டுமல்ல, என்னைப் பாராட்டி பத்திரிகையில் மறுநாள், அவர் கைப்பட தலையங்கம் எழுதி, எனக்குப் படித்துக் காண்பித்து வெளியிட்டார்.
குருவின் பாராட்டு தலைப்பெற்று அதன்வழி நடக்கிறேன். குருமாறினாலும், சீடன் செயலில் மாற்றமில்லை, ஏகலைவன் போல, கலை மிக அவசியம்.
கலை மூலம் நமது மக்களுக்கு அரசியல் சமுதாய சீர் திருத்த எண்ணங்களைப் புகுத்தலாம். நடிப்பின் மூலம் உணர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கலாம். அதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம், தன் கொள்கைப்படி பல நடிகர்களை நாட்டிற்குத் தந்திருக்கிறது.
மதபக்தி, மூட நம்பிக்கை நம் மக்கள் மனதில் ஆழ பதிந்திருக்கிறது அதில் மாற்றம் காணவேண்டும், வர்ணாசிரம கோட்பாடுகள் நிலைத்திருக்க ஆரியர் கை–