பக்கம்:போராட்டம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண்ணா

13


மக்கள் மத்தியில் கதாகாலக்ஷேபங்கள் செய்ய வேண்டும்.

ஆச்சாரியார், நாஸ்திகம் பரவி விட்டது. அதை ஒழிக்கவேண்டுமென்கிறார். ஆஸ்திகம் வளர அவர்கள் கூட்டம் வேலை செய்யட்டும் அதை தடுக்கவேண்டிய புதிய திட்டம் நமக்கு தேவையில்லை. அவர்கள் கையாளும் கதாகாலட்க்ஷேபமே போதுமானது.

காரைக்காலம்மையார் பட்ட கஷ்டத்தைச் சொல்லுங்கள். சாக்ரடீஸ், விஷமூட்டப்பட்ட கதையைச் சொல்லுங்கள்.

கலீலே சமூக சீர்திருத்த வாதி மறைக்கப்பட்டதை கூறுங்கள், திருஞான சம்மந்தர் ஞானப்பால் குடித்த தன்மையை விளக்குங்கள். நாடு அறியாது இருந்த நல்லவர்களை, அவர்களை நாட்டுமக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி கூறுங்கள் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களை. அதன் பின் நடக்குமா புராண புரட்டு காலட்க்ஷேபத்தின் மூலம் பாருங்கள்.

பாகவதர்கள்தான் காலட்க்ஷேபம் செய்ய பிறந்தவர்கள் என்று நினைக்கவேண்டாம், நீங்களும் அவர்களைப்போல், பட்டு பீதாம்பரங்களைக்கட்டி, பளபளப்பான மோதிரங்களை அணிந்து, கையில் கஜ்ஜரா கட்டையுடன் தோற்றமளியுங்கள். கூறுங்கள் சீர் திருத்தவாதிகளின் சரித்திரத்தை கேட்பவர் கேலிசெய்யார், பார்ப்பவர் பரிகசிக்க மாட்டார்கள். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/13&oldid=1770945" இலிருந்து மீள்விக்கப்பட்டது