இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிஞர் அண்ணா
15
திராவிட முன்னேற்றக்கழக சென்னை கிளைகள் இதில் அக்கரைச் செலுத்த வேண்டும் ஒவ்வொரு கிளைக் கழகமும் ஒரு படிப்பகத்தை திறந்து அதன் மூலம் மக்கள் அறிவு தெளிவு பெற பாடுபடலாம். அதற்கான வேலைகளில் நானும் பங்குகொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த வட்டத்திலுள்ளவர்கள் முதன் முதல் இம்முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டு நான் அவர்களைப் பாராட்டுகிறேன். அவர்கள் மேலும் மேலும் ஊக்கம் குன்றுமல் உழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
வணக்கம்.