16
போராட்டம்
தலைவர் அவர்களே! தோழர்களே !!
இன்றைய விழாவிற்கு இவ்வளவு பெருவாரியான மக்கள் கூடியிருப்பதைக் காண நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நிதியளிப்பு விழா சிறப்பாக நடைபெற, திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழுவும், கருணாநிதியும் எடுத்துக்கொண்ட முயற்சி நமக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. நான் உங்கள் சார்பாக அவர்களை பாராட்டுகிறேன்.
தோழர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அறியதோர் சொற்பொழிவு ஆற்றினார். நீங்களும் கேட்டு ரசித்தீர்கள். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன், நாடக சம்பந்தமாக நடிகர் நாராயணசாமி மூலம். முதன் முதலில் நான் அவரை சந்திக்கும்போது சந்தேகம் கொண்டேன் அவர் ஒரு ஆரியன் என்று. பிறகு அவர் ஒரு திராவிடன் என்று தெரிந்து ஆனந்தமடைந்தேன்.
அவருடைய தோற்றம், அழகு, உடல் அமைப்பு, பளப்பளப்பு, பார்ப்பனர்களுக்கு பொறுமையை உண்டாக்கியிருக்கு மென்பதில் ஐயமில்லை. அவருடைய பேச்சு பெருமைக் குறியது. அவருடைய ஒத்துழைப்பு, நமது எதிர்கால திட்டத்திற்கு வெற்றியைத் தேடித்தருமென்று நம்புகிறேன்.