பக்கம்:போராட்டம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண்ணா

17


தோழர் மதியழகன் பேசும்போது, ஆட்சியாளர் போக்கை மிக அழகாக, எடுத்துக் காட்டினார். காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நாடு பிற்போக்கடைந்துள்ள நிலைமையை.

நாட்டு மக்களுக்காக பாடுபடும் எந்த கட்சியானாலும், தனிப்பட்ட மனிதர்களானாலும் அவர்களிடம் தன்னடக்கம், தளராத ஊக்கம், பெருந்தன்மை இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.

நம்மைக் கண்டு சில, பல சில்லுண்டிகள், சிந்து பாடுகிறார்கள், கேலியும் கிண்டலும் கிளம்புகிறது மாற்றார்களிடமிருந்து, அது மாறாது! காரணம்? அவர்கள் மாற்றார்கள்.

நான் சிறுவனாக இருந்த போது, நான் இருக்கும் வீதிக்கு அடுத்த வீதியில் ஒரு பஜனைக் கூடம் இருந்தது. அதை சோமசுந்திர முதலியார் முன்னின்று நடத்திவந்தார். அவர் வாரந்தோறும் சுண்டல் செய்து தருவது வழக்கம் பஜனைக்கு வரும் மக்களுக்கு. அந்த சுண்டலையும், அந்த மனிதரே தயார் செய்வார். அது மட்டுமல்ல, கடலை வாங்க அவரே கடைக்குச் செல்வார். காரணம்? யாரையும் நம்ப மாட்டார்.

அதைக் கண்டு ஊரார் கிண்டலும் கேலியும் செய்தனர். இவ்வளவு பெரிய மனிதன் தானே கடைக்குச்சென்று, கடலைவாங்கி, அடுப்பேற்றி சுண்டல் செய்து, தானே பங்கிடுகிறானே, யாரையும் நம்பாத பாவி, லோபி என்று தூற்றினர்.

2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/17&oldid=1771100" இலிருந்து மீள்விக்கப்பட்டது