பக்கம்:போராட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

போராட்டம்


விஷயம் முதலியார் காதில் விழுந்தது. மறுநாள் கடலை வாங்க ஒரு ஆளை அனுப்பினார். வாங்கி வந்த கடலையை சுண்டல் செய்ய மற்றொருவரைக் கொண்டு செய்தார். பங்கிட பக்தர்களில் ஒருவரை நியமித்தார். “பார்த்தார்கள் ஊரார், இந்த செய்கையைப் பாராட்டினார்கள் இல்லை. உடனே பழிக்க முற்பட்டார்கள். பார்த்தீரா முதலியார் ஜம்பத்தை! வாழ்வு அதிகமாகிவிட்டது பஜனை மடத்து பணமல்லவா அவருககென்னவந்தது” என்று

தானே செய்து வந்த வேலைக்கு இப்பொழுது தனித் தனியாக ஆள் வைத்துவிட்டார். இந்த வாழ்ல எத்தனை நாட்களுக்கு பார்க்கலாம் ! என்று பரிகசிதார்கள். பரிதாபத்திற்குறிய பஜனை மடம் வேலையைப் போல தான். பொது வாழ்வும்.

பொது வாழ்வு பஜனை மடத்தை விட மிகவும் கஷ்டமானது, பொறுப்பு வாய்ந்தது. பொது வாழ்வில் ஈடு பட்ட எவரும் புகழப் படுவதைப் போல், பன்மடங்கு தூற்றப் படுவார்கள்.

அந்த தூற்றலைக் கண்டு துக்கப்படவோ, கஷ்டப்பட்டு கலங்கவோ கூடாது. அப்படிப்பட்டவர் பொது வாழ்விற்குப் புறப்பானவர். எதையும் ஏற்கும் இருதயம் வேண்டும் பொதுத் தொண்டிற்கு. உதாரணமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளியில் நாலாவது வகுப்பிற்குறிய ஒரு பாட புத்தகத்தில் ஒரு கதையுண்டு. தந்தையும் தனையனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/18&oldid=1771109" இலிருந்து மீள்விக்கப்பட்டது