அறிஞர் அண்ணா
19
கழுதை மீது ஏறி அடுத்த ஊர் பிரயாணம் செய்தார்கள். பாதையில் போவோர் வருவோர் பார்த்தனர் இவர்களை, பரிதாபப் பட்டனர் கழுதைக்காக.
இரண்டு தடியர்களும் கழுதை மீது உட்கார்ந்துக்கொண்டு போகிறார்கள், பாவம் கழுதை அவர்களைத் தாங்க தத்தளிக்கிறது என்றனர். உடனே அவர்கள் கழுதையை விட்டிறங்கி நடக்கலாயினர். சிறிது தூரம் சென்றதும், சிலர் கூறினர். குழந்தையை நடக்கவைத்து அழைத்து போகிறான் பாவி, கழுதை மீது உட்கார வைத்து போகக் கூடாதா என்றனர். அதை கேட்ட தந்தை, மகனைக் கழுதை மீது ஏற்றிச் செல்ல ஆரம்பித்தான். அதற்கு அடுத்து, கொஞ்ச தூரம் போனதும் ஒரு கூட்டம் அக்காட்சியைக் கண்டு, தள்ளாத கிழவன் தடுமாற்றத்தோடு நடந்து செல்ல, நடக்க சக்தியுள்ள பையன் கழுதை மீதா என்றனர் குறும்புக்காரர்கள்.
இந்த கூற்றைக் கண்ட இருவரும் கழுதையைத் தூக்கி தோளின் மீது சுமந்து ஆற்று பாலத்தைக் கடக்கலாயினர். நடு பாலத்திற்கு வந்ததும், கழுதை ஆற்று வெள்ளத்தைக் கண்டு மிரண்டு, கால்களை உதைத்து உதறி ஆற்றில் விழ, விழுந்து கொண்டிருக்கும் கழுதையைத் தாவிப்பிடிக்க தனயனும், அவனைப் பிடிக்க தந்தையும் ஒருவர் பின் ஒருவராக விழுந்தனர் ஆற்றில். ஆற்று வெள்ளம் அவர்கள் மூவரையும் விழுங்கிற்று.