பக்கம்:போராட்டம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

போராட்டம்


இந்தக் கூற்றுக்கு ஒப்பானது குற்றம் குறை கூறும் குறும்பர்கள் செய்கை. ஆகவே பொதுச் சேவை சிரமமானது மட்டு மல்ல, சிக்கலானது சிந்திப்போருக்கு.

எதிரிகளின் செய்கையைக் கண்டு கலங்காமல், ஆர்வத்தோடு, தான் கொண்ட கொள்கைக்காக உற்சாகத்தோடு உழைக்கும் உறுதி வேண்டும் பொது வாழ்வில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு.

கிண்டல் பாணம், கேலிவம்பு, துணிச்சலான தூஷனம், வசை வாள் எல்லாம் நம்மைத் தாக்கும் ஆனால், சலியும் இதயம் படைத்தவரல்ல நாம் எதையும் தாங்கும் இதயம் படைத்த இலட்சிய வீரர்கள் நிறைந்த அறிவுப் பாசறை தான் நமது திராவிட முன்னேற்றக் கழகம். ஆகவே எவ்வித மனச்சோர்வோ கசப்போ நம்மிடையில் நிச்சயமாக தலைதூக்கக் கூடாது. தன்னடக்கம், தன்னம்பிக்கை நம் வாழ்வின் இலட்சியம்.

தஞ்சை, திருச்சிமாவட்டங்களில் புயல் தெளித்த சோகவிதை மிகப்பெருத்த அளவிலே சேதத்தைத் தந்தது. வீடிழந்த மக்கள் கண்களை கடலாக்கிக் கொண்டனர். குடிசைகள் காற்றில் பறந்தன.கால் நடைகள் காணவில்லை. வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் மாண்டன. மக்கள் பலரும் இரையாயினர். இடித்த இடிக்கும், கனத்தமழைக் காற்றுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/20&oldid=1771114" இலிருந்து மீள்விக்கப்பட்டது