பக்கம்:போராட்டம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிஞர் அண்ணா

21


தென்றல் தென்றலென தெம்மாங்கு பாடிய தேசியவாதிகள் வாயிலே புயல், புயல் என்ற புதிய கீதம், பூரித்த உள்ளங்களிலே புலம்பல். சலித்த முகங்களில் சிந்தனைத் தோற்றம். சிந்தனைச் சிங்கங்கள் சிலந்தையாக மாறின. மருட்சியடைந்தனர் மக்கள் புயலால்.

மாளிகைகள் மறைந்தன. அதே நேரத்தில் மண்குடிசைகள் கடலிலே மிதந்தன. ஆடையிழந்து ஆதரிப்பாரற்று அங்குமிங்குமாக ஓடி அலைந்தனர். அவர்களுக்கு உதவவே தஞ்சை புயல் நிவாரண நிதிகுழு உருவாயிற்று.

நிவாரணத்திற்கு ரூபாய் 25,000 தேவையெனக் கருதினோம். அந்தத் தொகை மிக மிகச் சொற்பம் காசு படைத்தவர்களுக்கு, மாளிகையின் உள்ளே மஞ்சத்தில் கொஞ்சும் மகுடாதிபதிகளுக்கு, ஆனால் நமக்கு குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிக மிகப் பெரிது. பக்தர்களல்ல நாம் பஜகோவிந்தம் பாடிப் பணம் திரட்ட, செல்வச் சீமான்களல்ல சரியென்று ‘செக்’ எழுதித் தந்துவிட. சாதாரணமானவர்கள். நடுத்தர குடும்பத்தினர், நாதியற்றவர்கள், நம்மால் ரூ,25,000, தரமுடியுமா என்ற சந்தேகத்தில் மயங்கினோம். இந்தத் தொகை நம்மால் நிச்சயமாக எவராலும் தரமுடியாது.

நடிகர் இராமச்சந்திரனைக் கேட்டால் நான் மறுபடியும் காங்கிரசுக்கு போய்விடுவேன் என்று கூறலாம். கருணாநிதியைக் கேட்டால் கடுமையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/21&oldid=1772373" இலிருந்து மீள்விக்கப்பட்டது