பக்கம்:போராட்டம்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டினித் தோட்டம்
இளங்கீரன்
எழுதியது

குடிசையூரிலே பிறந்த பசியப்பன் ஒரு நாள் எப்படியோ பணத்தோட்டத்திற்குள் புகுந்துவிட்டான். அங்கே குபேரபுரியிலே பறக்கும் செல்வக் கொடியின் கீழ் வசிக்கும் மனிதர்களின் கோலாகலம் நிறைந்த வாழ்க்கையைக் கண்டான். குடிசையூர்க் கோமளாங்கி ஒருத்தி குபேரபுரி வாழ்வை வர்ணிப்பதையும் அவள் துணையால் அவன் அந்த வாழ்க்கையைப் பொறாமைக்கண்களோடு பார்த்துச் செல்வதையும் நீங்களே படித்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

பாவம், தான் வசிக்கும் துன்பக் கோட்டையுள் இருக்கும் குடிசையூரையும் அதில் பறக்கும் கன்னங்கரிய வறுமைக் கொடியையும் நினைக்கும்போது அவன் உள்ளம் தீப்பற்றி எரியாமலா இருக்கும்?

இந்த அழகிய உருவகக்கதையை ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்துப் பார்க்கவேண்டும்.

அழகிய மூவர்ண முகப்புடன்
விலை ரூபா ஒன்று

விபரங்களுக்கு :

சத்தி பதிப்பகம்
12, குமரப்ப முதலி தெரு,
சென்னை-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/4&oldid=1770999" இலிருந்து மீள்விக்கப்பட்டது