பக்கம்:போராட்டம்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

போராட்டம்


எனக்கு முன்னால் தோழர் இராமச்சந்திரன் அவர்களும், தோழியர் சத்தியவாணி முத்து அவர்களும் பேசினார்கள். நீங்களும் கேட்டீர்கள், மகிழ்ந்தீர்கள்.

அவர்கள் பேசும்போது, உதாரணத்திற்காக சில விஷயங்களை எடுத்துக் காட்டினார்கள். அதை மாற்றுக் கட்சியினர் பொது மக்களிடம், திருத்திக் கூறிதப்பபிப்ராயம் கற்பித்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. குற்றம் குறை கண்டுபிடிப்பதே மாற்றுக் கட்சியின் வேலையாகி விட்டதால், அவ்வித அந்த நிலை ஏற்படக்கூடாதென்று ஆசைப்படுகிறேன்.

தோழர் இராமச்சந்திரன் கலையும் வாழ்வும் என்னும் பொருள் பற்றி பேசும்போது பலப்பல அறிய விஷயங்களைக் கூறினார். கற்காலம் முதல் இக்காலம் வரை நாகரிகம் என்ன நிலையில் இருந்து வருகிறது என்பதை அழகு படுத்தி ஆதாரங்களைக் காட்டினார். அப்படிக் காட்டப்பட்ட ஆதாரங்களில், ஆச்சாரியார் சர்க்கார் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி திட்டம். அக்கல்வி திட்டத்தில் உள்ள குறைபாடுகளைவும், முரண்பாடுகளையும் எடுத்துக் காட்டினார்.

ஜாதி பேதம் ஒழிய வேண்டும், கலப்பு மணம் அவசியம் என்று ஆச்சாரியார் ஒரு இடத்தில் பேசிவிட்டு, மற்றொரு இடத்தில், கல்வி கற்பது மட்டுமல்ல மாணவர்களுக்கு முக்கியம் தொழில் துறையிலும்; அவர்கள் குல சாம்பிரதாயப்படி, அதை மறவாமல் வண்ணான், வண்ணாரத் தொழிலையும், அம்பட்டன் அம்பட்டத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/6&oldid=1771199" இலிருந்து மீள்விக்கப்பட்டது