பக்கம்:போராட்டம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

போராட்டம்


னிடம் உங்களுக்கு குழந்தையில்லை, நீங்கள் வேறு ஒருவளுடன் இருங்கள். நான் வேறு ஒருவனுடன் இருக்கிறேன், இது தவறு இல்லை என்பதை புராணம் கூறுகிறதே, என்ற கேள்வியைப் போட்டு கணவனைத் திணர அடித்தாள். அவர் திண்டாடினார். அதில் அவர் எடுத்துக் காட்டியது பெண் எழுச்சிபெற்றாள் என்பதை தெளிவு படுத்தவே அல்லாமல், ஒவ்வொருவரும் அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல, அவர்களுடைய எண்ணம், நோக்கம்.

இந்த பேச்சில் சிந்திய எச்சிலை, எதிர் கட்சியார், பொது மக்களிடம் திரித்துக்கூறி, தங்களுக்கு ஆதரவு தேட முற்படலாம், அது ஆகாத காரியம் என்று அவர்களுக்கு எச்சரிக்கிறேன். இருவரின் பேச்சிலும், குற்றம் குறைகள் இல்லை என்பதே எனது அபிப்ராயம். பொது மக்களும் அப்படியேதான் நினைப்பார்கள். எதிர் கட்சியின் ஏமாற்றலுக்கு பொது மக்கள் செவிசாய்க்கக் கூடாது.

பொதுவாக நமது நாடு கல்வித் துறையில் பிற்போக்கடைந்துள்ளது. மற்ற நாட்டை போல கல்வியைப் பரப்புவதில் அக்கரை கொள்ளவில்லை நமது ஆட்சியாளர். அன்றாடம் ஓர் திட்டத்தை வெளியிட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் தொல்லை தந்து வருகின்றனர். மக்கள் பெற்றுள்ள கல்வி அறிவு மிகவும் குறைவு, பெற்ற அறிவை வளப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு இப்படிப்பட்ட படிப்பகங்கள் மிகவும் உதவியாக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/8&oldid=1771201" இலிருந்து மீள்விக்கப்பட்டது