பக்கம்:போராட்டம்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிஞர் அண்ணா

9


இருக்கும். படிப்பகங்கள் நாட்டில் அதிகமாக வளரவேண்டும். படிப்பகம் நடத்த பொருள் தேவைதான், அதை நாம் பொது மக்களிடமிருந்து பெற வேண்டும். இந்த உதவியும் பொருளாக இருப்பதைவிட, நூல்களாக இருந்தால் மிகவும் அவசியமென்றே கருதுகிறேன்.

தோழர் இராமச்சந்திரன் அவர்கள் கலையும் வாழ்வும் என்பதைப் பற்றி பேசும்போது மிக அழகாகவும், விரிவாகவும் பேசினார். கலைக்கு நல்லதொரு விளக்கமும் தந்தார். மக்கள் எழுச்சி பெற்றவர்களாக விளங்கவைப்பதே கலை. கலை புதியதோர் பாதையில் மக்களை நடத்திச் செல்வதாக இருக்க வேண்டும். பழமை மோகம் ஒழிய வேண்டும். மாற்றமென்பது மக்கள் நலன் கருதியதாக இருத்தல் மிக மிக அவசியம். அரசியலில் மாறுதல் வேண்டுமென்பது போல மதத்திலும் மாறுதல் வேண்டும்.

பழைய காலத்தில் இருந்தவை அந்தந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கலாம். அது இக்கால அறிவுக்கு பொறுத்த மற்றதாக இருந்தால்—அதை மாற்றி அமைக்க வேண்டாமா? மேல் நாடு நாகரீகவளம் அமைந்த நாடு என்று கூறுகிறார்கள். அங்கும் பல ஆயிரக்கணக்காண ஆண்டவன் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

நம் நாட்டைப் போன்று மினர்வா, ஜுபிடர், ஹர்ஜினா போன்ற எண்ணற்றவைகள். அவைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/9&oldid=1771202" இலிருந்து மீள்விக்கப்பட்டது