பக்கம்:போர் முரசு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 39 அடிமைப்பட்டுக் கிடக்கவும், தான் மட்டும் அவர்களைச் சுரண்டிச் சுரண்டியே, உழைக்காமல் கொள்ளாமல் உல்லாச வாழ்வு நடத்தவும் செய்து கொண்ட தந்திரமிக்க ஏற்பாடான வர்ணாஸ்ரமமுறை, இன்று சுயமரியாதைச் சுறாவளியால் சின்னாபின்னமாவது கண்டு திடுக்கிடுகிறது ஆரியம். ஆயிரம் ஆபிரம் ஆண்டுகளாக தான் கட்டிவந்த இன்ப கோட்டை இன்று று பகுத்தறிவாதிகளின் சீர்திருத்த பிரசாரத்தால் இடிந்து வருவது கண்டு ஆரியத்தின் எண்ணத்தில் இடி விழுந்துவிட்டது. எனினும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வரவில்லை. எப்படி வரும்? எத்தனையோ காலம் ஏமாந்தவர்களின் உழைப்பினாலேயே ஏகபோக சுகத்தைக் கண்ட கூட்டம் இன்று திடீரென மற்றவர்களைப்போல் வாழ ஒப்புமா? ஆகவே மீண்டும் அந்தக் கொடிய வர்ணாஸ்ரம முறையை நிலைநாட்ட முயற்சி நடக்கிறது. கூட்டமாக அன்று நம் தயவை நாடி வந்த நாடோடி இருந்ததால், சாகஸம் பேசி நம்மைப் பணிய வைத்தது. இன்றோ ஆட்சிப் பீடமே அதன் கையில் சிக்கிக் கொண்டி ருக்கிறது. எனவே இச்சகவார்த்தைகள் அதற்குத் தேவைப் படவில்லை. அதிகார மமதையொடு கட்டளையே போடுகிறது. உத்தர ஆம், சொந்த நாட்டினருக்கு, வந்த கூட்டம் விடுகின்றது. பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். பரபரப் படையவில்லை. நம் பண்புக்கேற்ப, அக்கிரமத்தை எதிர்த் துப் போர் முரசு கொட்டவில்லை. பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோம், இராவணன் ஆண்டாலென்ன, ராமன் ஆண்டாலென்ன என்ற மானங் கெட்ட முறையிலே. ஆச்சாரியாரின் கல்வித்திட்டம் பழைய வர்ணாஸ்ரம சதித் திட்டமே முறைக்கு வாழ்வளிக்கும் நாட்டிலுள்ள நல்லறிவாளர்கள் சொன்னார்கள், தொழிலையே செய்ய வேண்டும் என்ற இந்த என்று குலத் கட்டாயம் வேண்டாம், எங்கள் பிள்ளைகள் இன்றைய நவீன உலகிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/40&oldid=1706611" இலிருந்து மீள்விக்கப்பட்டது