பக்கம்:போர் முரசு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 49 இதைத்தானே காணமுடியும்? 'தோழர் கருணாநிதியின் வெற்றி முழக்கம்' என்றா போடுவார்கள்? சும்மாயிருந்தாலும், அமைதிக்கு இடமில்லாமல், ஒரு வேளை சில திராவிட விபீஷணர்கள் வந்து, எங்களை வழி மறிக்க, நாங்கள் நம்மிடம் அனுதாபம் கொண்ட பொதுமக்களில் சிலர் அந்த வம்பர்களை விரட்ட முயற்சிக்க, ஏதாவது கைகலப்பு ஏற்பட்டால், அப்போது சற்று எழுத்திலேயே வரும் செய்தி ! பெரிய டால்மியாபுரக் கிளர்ச்சியில்கைகலைப்பு! பொது மக்கள் ஆத்திரம்! தி. மு.க.-வினர் காலித்தனம்! அமைதி நிலவினால் பிசுபிசுத்தது! கலவரம் நடந்தால், அதற்குப் பொறுப்பாளிகள் நாம், பெயரும் காலித்தனம்! இந்த விளம்பரத்திற்கா நாங்கள் ஆசைப்படுவோம்! இதிலா எங்கள் கொள்கை, இலட்சியம் நாட்டு மக்களிடையே பரவமுடியும்? இல்லாமலா போய்விட்டது எங்களுக்கு மேடை? நாடு, நகரம், பட்டிதொட்டிகளில் எல்லாம் சூறாவளியெனச் சுற்றிவராமலா இருக்கிறார்கள் கழக முன்னணி வீரர்கள்? எதையும் விட சிறந்த பிரசார சாதனமான சினிமா’ எங்களிடம் சிக்கிக் கொண்டதே என்று மற்றவரல்லவா பொச்சரிப்பும் பொறாமையும் கொண்டுள்ளனர்! நாங்களா ஆசைப்பட வேண்டும் விளம்பரத்திற்கு? இந்தக் கேலியும் கிண்டலும், நம்முடைய இலட்சியப் பாதையிலிருந்து நம்மை விலக்க முடியாது. டால்மியாபுரப் போராட்டம் ஏன் ஆரம்பித்துள்ளோம்? அதன் நோக்கம், இலட்சியம் என்ன? டால்மியா-வடநாட்டான் பெயர் ! வளமிக்க விடத்தைச் சுரண்டும் வடநாட்டு முதலாளியின் பாங்குகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள், போ-4 திரா பெயர் ! வியாபார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/50&oldid=1706621" இலிருந்து மீள்விக்கப்பட்டது