பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும் அந்த மதத்தைப் பாப்புவதற்கு மகேந்திரருக்கு வேண்டிய உதவி செய்தார் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகின் றது. பின்னர் மகேந்திரரும் அரிட்டரும் சேர்ந்து பௌத்த மதததைத் தமிழ் நாட்டில் பரப்பியிருக்கக்கூடும். பாண்டிய நாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின் றன. இக்குகைகளில் பிக்குகள் படுத்துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கியமைக்கப்பட்ட படுக்கைகளும், அப் படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றன, இக்கற்படுககைகளின் அமைப்பு முதலியவை, இலங்கைத் தீவில் பௌத்தத துறவிகள் தங்குவதற்காகப பண்டைக் காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌததத துறவிகள் ஊருக்குள் வசிககக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால, அவர்கள் வசிப்பதற்காக மலைப் பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலதது வழக்கம். இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக குகைகளின ஒற்றுமையமைபபைக கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கட்ட.டவை என்றும், இப்பாண்டி நாட்டுக் குகைகளில் காணப்படும் எழுத்துக்களை ககொண்டு (இவை அசோகா காலத்துக் கல வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுததை ஒத்திருப்பதால்), இவை கி. மு. மூன்றாம் நூற்றாணடில அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்ல வர் கூறுகின றனர். இவ்வாறு காணப்படும் பாணடி நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி எனனும கிராமத்துக் கருகில் இருக்கின்றது. ' அரிட்டாபட்டி' எனனும் பெயர், இலங்கையிலிருந்து வந்து தமிழ் நாட்டில் பௌத்த மதத தைப் பரவச்செய்ய மகேந்திரருசகு உதவியாயிருந்த அரிட்