- பௌத்தமதம் மறைந்த வரலாறு தருக்ததாகத திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் அதுகின்றார். இந்தப் பெளத்த உட்பிரிவினர் தமக்குள் னேயே தர்க்கம் செய்து போரிட்டுக்கொண்டனர். இந்த உட்பிரிவுகளால் அந்த மதத்தின் வலிமை குன்றிவிட்டது. உடம்பில் தோன்றிய நோய நாளடைவில் உடலையே அழித்துவிடுவதுபோல, இந்த உட்பிரிவுகளே பௌத்த மதத்தின வீழ்ச்சிக்கு முதற்காரணமாயிருந்தன. அன்றி யும், பொதுமக்களாலும் அரசர்களாலும் செல்வந்தர்களா லும் அளிக்கப்பட்ட செல்வத்தினால், தமது பள்ளிகளில் பௌத்த பிக்ஷக்கள் தங்கள் கடமையை மறந்து, செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கிவிட்டார் கள். ஆகவே, இவர்களிடத்தில் பொது மக்களிடமிருந்த மதிப்புக் குன் றவும், பௌததம் தன் செல்வாக்கினை இழக்க நேரிட்டது. இவைபோன்ற குற்றங் குறைகளும் உட்பிரிவு களும் ஏற்படாமலிருந்தால், பௌதத மதம் தனது புறப் பகை மதங்களுடன் போரிடடுககொண்டே இன்றளவும் ஓரளவு நிலைபெற்றிருப்பினும் இருக்கும். ஆயினும், குறை பாடுகளும் உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டபடியால, அது புறப்பகையாகிய ஜைன வைதீக மதங்களுடன் போராட முடியாமல் வீழ்ச்சியடைந்துவிட்டது. கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டிற் குப் பின்னர், பௌததததின சிறப்புக் குன்றவும, ஜைன மதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ஆனால், அப்பொழுதும வைதீக ' மதம் உயர்நிலை அடைய முடியாமலே இருந்தது. பௌத்த மத வீழச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது. பெற்றதும், தனது கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் பெருந்தடையாயிருந்த பௌததததை முனனை விடக் கடுமையாகத தாககி, அதை
பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/22
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
