பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅ பௌத்தமும் தமிழும்

யச் செய்துவிட்டது ; தமிழ் நாட்டில் ஜைன மதம் என்றும் தலை தூக்க முடியா தபடியும், ஏற்கனவே ஜைன மதத்தால் வலிமை குன்றியிருந்த பௌத்த மதம் அடியோடு ஒழியும் படியும் இதனால நேர்ந்தது. சாததமங்கை முதலிய இடங் களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து அவர் களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்க வாசகர் சிதமபரததில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கை யாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்த பொன்னால் அமைந்த புத்தச்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக்கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்த மதத்தின் வீழ்ச்சியைக் காட்டு கின் றன. கலிகால சாகித்ய பண்டித பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி. பி. கஉசு...-இல சோளி (சோழ) தேசத்திலிருந்து பௌத்த பிக்ஷக்களை இலங்கைக்கு வா வழைத்துப் பௌத்த மதத்தை வலியுறச் செய்தான் என்று இலங்கைச் சரித்திரத்தினால் அறியப்படுகின்றதாகவின், கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் தமிழ் நாட்டில் சோழ தேசத்தில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்தது என்று துணியலாம். கி. பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டின் சிற்சில இடங்களில் பெளத் தரும் பௌத்தப்பள்ளிகளும் இருந்துவந்தன. பின்னர், டைவில், பௌததம் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது ; மறக்கவும்பட்டது. ஆனால், அதன் பெரிய கொள்கைகள் மட்டும் பல இன்னும் இந்துமதத்தில் போற்றப்பட்டு வருகின்றன. காள