பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும்

துக்கு இடையூறாயிருந்ததுபற்றி அவர் அவ்விடத்தை விட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத்தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர் களில் ஒருவர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தி யின் உறவினரான மகிந்தர், அல்லது மகேந்திரர் என்பவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தைப் பரப்பு வதற்கு முன், சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி, அங்கு ஏழு புத்த விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூமப்படுகின்ற இந்திர விகாரை என்பவை இவர் கட்டியவைகளே யென்றும், மகேந்திரர் கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச் சியிற் சிறந்த அறிஞாகள் கருதுகின்றார்கள். கி. பி. இரண் டாம் நூற்றாண்டில இந்த விகாரைகளின் தலைவராக அற வண அடிகள் என்னும் தேரா இருந்தார் எனத தெரிகின்றது. இந்த ஏழு இந்திர விகாரைகளையன்றி, ' உவவனம' என் னும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத பீடிகையை அப்பட்டின ததில் இருந்த பௌத் தர்கள் வணங்கிவந்தார்கள். அன்றியும், இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுததுச் * சுடுகாட்டுக் கோட்டம்' என்று ஏனைய மதததோரால் கூறப்பட்டதும், ' சக்கரவாளக் கோட் டம்' என்று பௌத்தரால் போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக்கோட்டத்தினுள் 'சம்பாபதி' என் னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்ததென்பதை யும், அக்கோயிலின் தூணொன்றில் கந்திற்பாவை என்னும்