பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்த திருப்பதிகள்


தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும், - சக்கரவா மம்' என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்ததெனப் தையும் மணிமேகலை என்னும் எலினால் அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் 'குச்சரக் குடிகை' என்றும், ‘முதியாள் கோட்டம்' என்றும் வேறு பெயர்கள் வழங்கப் பட்டன. கி, பி, இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அச்சாண்ட கிள்ளிவளவன் என்னும் அரசன், பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவு பூண்ட மணிமேகலையின் வேண்டு கோளின்படி, சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக்கொள்ளும் படி அதனை!! பௌத்தாகளுக்குக் கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டிடத்தைப் பௌத்தர்கள் அறச்சாலை யாகவும் பொத்திப் பள்ளியாகவும் அமைத்துக்கொண்டனர் என்றும் மணிமேகலை நூலினால் அறிகின்றோம். . ' ' இரசவாகினி' என்னும் பாளிமொழியில் உள்ள பௌத்த நூலில், சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டி னத்தில் சிவபெருமானுக்குக கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி நடைபெறும்போது சில பௌத் தத் துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக் குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌ ததக கோயிலாக்கி னார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. கி.பி. நாலாம் நூற்றாண்டில் அச்சு தவிக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசாரியர் காவிரிப்பூம்பட்டினத்