பக்கம்:பௌத்த தருமம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த தரும சம்பந்தமான முக்கியமான சொற்களும் சொற்ருெடர்களும் அக்கா i. ஆன்மா. அ/Aதா ஆன்மா இல்லாதது. அநாகாமி - இனிப் பிறப்பில்லாத நிலையை அடைந்தவர். அாக்மம் - ஆன்மா அற்றது. அ.நித்தம் } - அ.நித்தியம் I_ நிலையில்லாமை. அபிதருமம் - பெளத்த சமயக் கொள்கைகளின் நுட்பங்களை விளக்கும் திரிபிடகப் பகுதி. அப்பமாதம் - கருத்துடைமை, இடைவிடாத முயற்சி யுடன் கூடிய சிரத்தை "அப்பமாதோ அமத பதம் - கருத்துடைமையே நித்தியமான நிருவான மோட்சத் திற்கு வழி' என்பது புத்தர் திருவாக்கு இதற்கு நேர் எதிரானது பமாதம் - மடிமை. அமிதாபா - எல்லையற்ற ஜோதி நிறைந்தவர்: புத்தர். அருகத்து - நிருவானத்திற்கு உரியராகும் - நிலையிலுள்ளவர். அரு|ைரு _ நாமமும் உருவமும். அவதானம் - விர வரலாறு, புகழத்தக்க செயல். அவா - கிருஷ்ணை, ஆசை, வேட்கை. அவித்தை - பேதைமை, அஞ்ஞானம். அஷ்டாங்க மார்க்கம் - நிருவான மார்க்கத்திற்குரிய எட்டுப் படிகள். .அவா "איליל. - ?I, мпт |ந்தம் - புத்தர் வகுத்த வழிகளின்படி, விலக்க வேண்டிய பத்துத் தீவினைகளையும் விலக்கி, கொள்ள வேண்டிய பத்துச் சீலங்களையும் மேற்கொண்டு ஒழுகுவதில் அடையும் இன்பம். ஆன்மா - உடலை இடமாகக் கொண்டுள்ள அழிவில்லாத சரீரி, பிராணன், உயிர். இந்திரியங்கள் - சிரத்தை, வீரியம், ஸ்தி, சமாதி, பிரஞ்ளுை என்ற ஐந்து ஆற்றல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/10&oldid=848816" இலிருந்து மீள்விக்கப்பட்டது