பக்கம்:பௌத்த தருமம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெளத்த தருமம் - --- -- --- அடைகிருன் என்று 'பிருகதாரண்யக உபநிடதம்' கூறுகின்றது. "இதயத்தின் பாசங்கள் அனைத்தும் அறுக்கப்பெறும் பொழுது, உடனேயே நரன் அமர ளுகிருன் என்பது கதா உபநிடதம்.' 'பகவத்கீதை' காமத்தை ( ஆசையை ) மகாபாவம், மகாசத்துரு, நித்தியவைரி என்றெல்லாம் கூறும். ப ற் ற ற் று, விடுதலையடைந்து, ' நா ன் எனது ' என்ற எண்ணங்களற்றவனே சாந்தியடைவான் என்பதை அந்நூல் பலவாருக விளக்கியுள்ளது. புத்த பகவரும் காமத்தை-ஆசையை-அவாவைப் பலமாகக் கண்டித்துள்ளார். காட்டுப் புல்லைப்போல் ஆசைகள் வளரும் என்றும், ஆசைக் காட்டையே அரிந்து தள்ளவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி யுள்ளார். அத்துடன் சுயநலம், துவேஷம் முதலிய வற்றையும், எல்லாவற்றிற்கும் மூல காரணமான பேதைமையையும் அகற்ற வேண்டும் என். அவர் உபதேசித்தார். இந்த உல கிலோ, அல்லது அடுத்த உலகிலோ, எந்தத் துன்பங்கள் இருந் தாலும், அவைகள் அனைத்துக்கும் வேராக உள்ளது பேதைமை (அவிஜ்ஜாமூலக) என்றும், அவை (அத் துன்பங்கள்) விருப்பம் அல்லது ஆசை காரண மாக எழுபவை என்றும் அவர் கூறிஞர். உண் மையை உணராமை, அல்லது தவருக உணர்தலே பேதைமையாகும். பிரஞ்ஞாபாரமிதை என்று போற் றப்படும் மெய்ஞ்ஞானம் பெற்றவுடன் பேதைமை ஒழியும். உபநிடதங்களை ஆதாரமாய்க் கொண்ட வேதாந் திகளைப் போலவே, புத்தரும், திரவ்ய யக்ஞங்கள் ( பொருள்களை ஆகுதியாக்கிச் செய்யும் யாகங்கள் )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/107&oldid=848832" இலிருந்து மீள்விக்கப்பட்டது