பக்கம்:பௌத்த தருமம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 103 பயனற்றவை என்றும், ஞான பக்ளுமே சிறந்த தென்றும் உபதேசித்து வந்தார். முன்னேர்களைப் போலவே, பு த் த ரு ம் கரும வி தி ைய ஏற்றுக்கொண்டு உபதேசித்து வந்தார். வினைகளே முதலாய் நின்று உயிர்க்குப் பயனுகிய இன்ப துன்பங்களை அளிக்கும் என்று நம்புதலே கரு மவிதி. மன, மொழி, மெய்களின் விருத்தியேசெயலே - கருமத்திற்குக் காரணமானது. ஞான மார்க்கத்தில் செல் வோனுக்கு மன நிகழ்ச்சியே கரும மாகும் (மானளலம் கர்மா) என்பதை, "ஓ பிக்குகளே ! இச்சா சக் தி ைய உபயோகித்தலேயே (volition) நான் கருமம் என்று அழைக்கிறேன் t என்று அவர் அருளியுள்ளார். பகவத் கீதை'யும், பற்றற்ற நிலை யில், கேவலம் ஒருவனது உடலின் செயல் எதுவும் பாவமாகாது என்று பகர்வதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பேதைமையே பந்த காரணம் என்ப தையும், ஞானமே விடுதலைக்கு வழி என்பதையும், அவா (திருஷ்ணை) வே ரோடு நீங்கினுலன்றிச் சாந்தி யில்லை என்பதையும் புத்தர், முன்னேர்களைப் போலவே, ஆணித்தரமாக விளக்கியுள்ளார். ஏடுகளைச் சுமந்து கொண்டு திரிதல் ஞான மா காது. சாத்திரங்கள் பலவற்றையும் துருவித் துரு விப் பார்த்து, மனனம் செய்து கொண்டிருந்தால் போதாது. முன்னேர்களாகிய மேதாவிகள் கூற்று என்பதற்காக எதையும் நம்பிவிடக் கூடாது என்றும், பகுத்தறிவு காட்டும் பாதையிலே நடந்து வரவேண் டும் என்றும் புத்தர் கூறியது முன்னர் பலவிடங் களில் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. இந்தச் 1 அங்குத்தா கிகாயம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/108&oldid=848834" இலிருந்து மீள்விக்கப்பட்டது