பக்கம்:பௌத்த தருமம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெளத்த தருமம் ஆன்மா அழிவம்மது, அதை அழிக்கவும் முடியாது. இருவர் இருக்கால் ஒருவரை மற்றவர் பார்க்கலாம், ஒருவரை மற்றவர் (உருசியால்) உணரலாம், ஒருவரை மற்றவர் வணங்கலாம், ஒருவர் மற்றவர் கூறுவதைக் கேட்கலாம், ஒருவர் மற்றவாைக் நீண்டலாம், ஒருவா மற்றவரை அறியலாம். ஆனல் ஆன்மா ஒன்றுமட்டுமே இவை எல்லாமாக இருக்கும்போது, நாம் மற்றவரைப் பார்க்கவோ, உருசியால் உணரவோ, கேட்கவோ, ண்ேடவோ, அறியவோ எவ்வாறு இயலும்? எவனுடைய சக்தியால் இவைகளை யெல்லாம் நாம் அறிகிருேமோ, அவனை சாம் அறிவது எங்ஙனம் ? அந்த ஆத்மனை அன்று, அன்று-நேதி, கேதி ' என்ற முறையிலேயே விளக்கிக் கூறலாகும். அவன் புரிந்துகொள்ளப் பெருதவன் - ஏனெனில் அவனைப் புரிந்துகொள்ள முடியாது; அவன் அழிக்கப் பெருசவன்-எனெனில் அவனை அழிக்க முடியாது; அவன் பற்றற்றவன் - எனெனில் அவன் எதையும் பற்றிக் கொள்வதில்லை: அவனுக்கு எவ்விதப் பக்கமுமில்லை, துக்கமு மில்லை, அழிவுமில்லை. எ, பிரியே! (எல்லாவற்றையும்) அறிபவனை ஒருவன் எங்கனம் அறிந்துகொள்ள முடியும்? ' மற்ருேரிடத்தில், "......... அங்கே கதிரவனே, தண்மதியோ, தாரகைகளோ, இந்த மின்னல்களோ பிரகாசிப்பதில்லை, இந்தத் தியைப்பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவன் பிரகாசிக்கும் பொழுது, அவனைத் தொடர்ந்து ஒவ்வொன்றும் பிரகாசிக் கின்றது: அவனுடைய ஒளியால் உலகம் அனைத்தும் ஒளி செய்யப் பெறுகின்றது என்று கூறப்பட் டுள்ளது. -- கண் அங்கே செல்வதில்லை, மொழிக்கும் மனத் திற்கும் அது அப்பாலுள்ளது, அதை எப்படிப் போதிப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. (நாம்) தெரிந்தவற்றிலிருந்து அது வேறுபட்டது. நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/111&oldid=848842" இலிருந்து மீள்விக்கப்பட்டது