பக்கம்:பௌத்த தருமம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

107


தெரியாதவற்றிற்கும் அது மேம்பட்டது, நமக்கு இதைப் போதித்த முந்தையோரிடமிருந்து நாம் இவ்வாறு கேள்விப்பட்டுள்ளோம்’ என்றும், ‘எவன் தனக்கு அது தெரியாது என்று எண்ணுகிறானோ அவனுக்கு அது தெரிந்துளது, எவன் அதை அறிந்ததாக எண்ணுகிறானோ அவனுக்கு அதைப் பற்றித் தெரியாது’ என்றும் ‘கேன உபநிடதம்’ வருணித்துளது.

புத்தர் பெருமான் தாம் கூறிய பரமபதமாகிய நிருவாண நிலையை மண்வாசனையே யில்லாத அழிவற்ற அமர நிலையாக வருணித்திருப்பினும், ஆன்மாவைப் பற்றி மேலே குறித்துள்ள முறையில் எதுவும் கூறவில்லை. அவருடைய உபதேசங்களையும், கொள்கைகளையும், மக்களுக்கு அவர் வகுத்துள்ள பயிற்சித் திட்டத்தையும் பரிசீலனை செய்து பார்த்தால், ஆன்மாவைப் பற்றி அவர் வேண்டுமென்றே, உறுதியான முறையில், முன்னோர்களுடைய கூற்றை மறுத்திருப்பதாகத் தெரிகின்றது. ஐந்து கந்தங்களில் எதுவும் ஆன்மாவாக இருக்க முடியாது; மரத்தோடு நிழல் சேர்ந்திருப்பது போல அது உளதா என்றால், அதுவுமில்லை; பூவில் மணம் பொருந்தியுள்ளது போல அது உளதா என்றால், அதுவுமில்லை; பெட்டியிலுள்ள இரத்தினம் போல அது உளதா என்றால், அதுவுமில்லை என்று அருவுருக்களில் ஆன்மா இல்லை என்பதை அவர் பிரித்துப் பிரித்துக் கூறியுள்ளார். [1]

‘இவ்வாறும், வேறு பல முறைகளிலும், மற்ற சித்தாந்தங்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையான ஓர்


  1. ‘சுத்தநிபாதம்’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/112&oldid=1386915" இலிருந்து மீள்விக்கப்பட்டது