பக்கம்:பௌத்த தருமம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பெளத்த தருமம் பிரவாகங்கள் என்றும் பெளத்த தருமம் விளக்கி யிருப்பதால், பிரக்ஞைக்கு (மனித அறிவுக்கு) அப்பாற்பட்ட ஒன்று-ஆன்மா-உளது என்பதை அத்தருமம் தெளிவாக நிராகரித்திருப்பது இயற் கையே யாகும்' என்று அவர் குறித்தள்ளார். 'தனியான ஒர் அகம் அல்லது ஆன்மா என்பதை மறுத்திருப்பதால் மனிதனின் தனிப் பண்பையும் (ஒப்புக்கெர்ள்ளாமல்) ஒதுக்கிவிட்ட தாக் ஆகாது. ஆனல் அதல்ை தனிமனிதன் தன் அறிவுத் திறனிலும் ஒழுக்க முறையிலும் வளர்ச்சி யுறுவதையும், பரிபூரண நிலை அடைவதையும் தடை செய்யக்கூடிய தவனை ஒன்றிலிருந்து விடுதலை பெற்றதாகவே ஆகும். (பெளத்த) த ரு ம ம் வாழ்க்கையிலிருந்து "ஆன்மா' என்ற தற்செருக்கை அகற்றி விடுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.1 'கண் அங்கே செல்வதில்லை, அது மொழிக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டது. அதைப்பற்றி ஒருவர் “As Buddhism resolves the whole phenomenal universe, outside which nothing exists, into pure psychic processes (dharma),it is but natura! that it should categorically reject the existence of an atmon, a transcendental subject outside consciousness."

  • The Essence of Buddhism'— by P. Lakshmi Narasu.

ł "The denial of a separate self, an atman, does not obliterate the personality of a man, but liberates the individual from an error that is liable to stunt his intellectual and ethical development and hinder his attainment of perfection. The Dharma removes from life the vanity of неlf." —"The Essence of Buddhism."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/115&oldid=848850" இலிருந்து மீள்விக்கப்பட்டது