பக்கம்:பௌத்த தருமம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பெளத்த தருமம்



புத்தர் பெருமான் ஊர் ஊராகச் சென்று பிற சமயங்களைக் கண்டனம் செய்துகொண் டிருக்கவில்லை. வேதங்களும் உபநிடதங்களும் இறுதியாகக் கூறும் ஒரே தெய்வத்தைப் பற்றிய கொள்கையையும் அவர் ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்யவில்லை. அதை மறுத்து வாதம் செய்யவுமில்லை.

இதற்குக் காரணம் காண்பது கடினமான்று. பெருமானுடைய குறிக்கோள் உலகின் துக்க காரணத்தைக் கண்டுபிடித்துத் துக்கத்தை நீக்க வேண்டும் என்பது. துக்கத்தின் காரணம் பேதைமையை அடிப்படையாகக் கொண்ட அவா முதலிய சார்புகள் என்று கண்ட பின்பு, அவைகளை நீக்கும் வழியை அவர் கண்டார். மெய்யறிவு பெற்று ஒழுக்கங்களைப் பேணி, உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொண்டு, தியானம் செய்வதன் மூலம் பேதைமை முதலியவை நீங்கித் துக்கத்திலிருந்து விடுதலை பெறலாம் என்பதே அவர் கண்ட வழி. இத்தனைக்கும் இறை நம்பிக்கையோ, ஆன்ம நம்பிக்கையோ அவருக்கு அவசியமா யிருக்கவில்லே. இறை, ஆன்மா என்ற பெயர்களைக் கேட்டவுடனேயே, உலகில் தத்துவவிசாரங்கள் நடைபெற ஆரம்பமாகிவிடும். அவைகளை முடிவு செய்து, மெய்யறிவு பெறுதல் என்பது எளிதன்று. இந்தச் சிக்கவில் மக்கள் மதிமயங்கி நின்றுவிடக் கூடாது என்பதே புத்தர் பெருமானின் கருத்து.

பரம்பொருளைப் பற்றியோ, மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மநிலை பற்றியோ அவரிடம் எவராவது கேள்வி கேட்டால், அவர் மறுமொழி கூறாமல் மெளனமாயிருத்தல் வழக்கம். சில சமயங்களில் ஏதாவது மறுமொழி சொன்னால், அத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/117&oldid=1386873" இலிருந்து மீள்விக்கப்பட்டது