பக்கம்:பௌத்த தருமம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

113


கேள்விகளுக்குப் பதில் தெரிவதால் செயலுக்கு ஒருவித உதவியும் இல்லை என்றும், உணர்ச்சிகளை அடக்கவோ, அவாவை வெறுத்துத் தள்ளவோ, மனச்சாந்தி பெறவோ, அறிவைப் பெருக்கிக் கொள்ள வோ, ஞானம் பெறவோ, நிருவாண மடையவோ அது உதவியாயில்லை என்றும் கூறி விட்டு அவர் மெளனம் சாதிப்பார்.

புத்தருடைய மெளனத்தின் பொருள் என்ன ? ஒருவேளை அவரே அக்கேள்விகளுக்கு மறு மொழியை அறியாமல் இருந்திருக்கலாமா ? இல்லை, அவ்வாறு எவரும் கூறத் துணியமாட்டார். அவர் பேரறிவுபெற்ற பெரியார் என்பதிலே சந்தேகமில்லை. ஆனால் மக்களுக்கு எவை தேவையில்லையோ, அவைகளை முதலிலேயே கூறி, அவர்களை முன்னேற விடாமல் தடை செய்தும், பயமுறுத்தியும் வைக்க அவர் விரும்பவில்லை என்பதே சரியான காரணமாகும். அவர் தாம் அறிந்திருந்த எல்லா விஷயங்களையும் சீடர்களுக்கு உபதேசிக்கவில்லை; பயிற்சிக்கும் தெளிந்த சிந்தனைக்கும் உதவியான விஷயங்களை மட்டுமே அவர் கூறிவந்தார். தத்துவ விசாரங்கள், விவாதங்கள், சமயச் சண்டைகள் ஆகியவற்றை அவர் விரும்பவில்லை.

மேலும் மெளனம் என்பதும் தொன்று தொட்டே ஆன்றோர்கள் கையாண்டுவந்த ஒரு போதனா முறையாகும். உபநிடதங்களிலும், பிற நூல்களிலும் இதைக் காணலாம். பாஸ்கலின் என்பவன் தன் குருவிடம் ஆன்மா பற்றிய உண்மையைப் போதிக்கும்படி வேண்டினான். அவர் மெளனமாகிவிட்டார். சீடன் இரண்டு மூன்று முறை வற்புறுத்திக் கேட்க ஆரம்பித்தான். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/118&oldid=1386877" இலிருந்து மீள்விக்கப்பட்டது