பக்கம்:பௌத்த தருமம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 120 மன்ருடிலுைம், மன்னித்து ஒதுக்கிவிடக் கூடிய அதிகாரியும் இல்லை." கரும விதி மனித முயற்சிக்குத் தடையாக நிற்கவில்லை. ஆளுல் மனிதன் தன் வினையின் பயனை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இவை இரண்டும் முரண்பட்ட விஷயங்கள் அல்ல, இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குகின்றன. முற்பிறப்புக்களின் வினைப் பயனுல் ஒருவன் இந்தப் பிறவியில் செல்வ நிலையிலோ, தரித்திரத் திலோ பிறக்கிருன், அறிவாளியாகவோ, அறிவிலி யாகவோ விளங்குகிருன். ஆளுல் இந்தப் பிறப்பில் நல்ல சூழ்நிலை அமைந்து, அவனும் நல்வினைகளை இடைவிடாமற் செய்துவந்தால், முந்திய கருமப் பயனுக்கும் மேலே பறந்து நற்பயனைப் பெற முடியும். ஆகவே வள்ளுவர் கூறியுள்ள ஊழுக்கும் பெளத்த தருமத்தின் கருமப் பயனுக்கும் இந்த வேற்றுமையுளது. ஊழைப் பார்க்கினும் வல்லமை யுள்ளவை வேறு எவை இருக்கின்றன? அந்த ஊழை ஒழித்துவிட முயன்ருல், அங்கேயும் அவ்

  • "Buddhism is fatalistic in the sense that the present is always determined by the past, but the future remains frce. Every action we make depends on what we have comc to be at any time, depends on the direction of the will. The karmic law merely asserts that this direction cannot be altcroci suddenly by the forgiveness of sins, but must be changcd by our own cfforts."

—“Buddha and the Gospel of Buddhism" by Dr. Ananda Coomaraswamy.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/134&oldid=848889" இலிருந்து மீள்விக்கப்பட்டது