பக்கம்:பௌத்த தருமம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 நல் வர்ய்மை - சத்தியமான வாக்கு; .ெ ப ா ய், புறம் புேசுதில், பயின்ற பேச்சு ஆகியவற்றை விலக்கி, நயம்பட உரிைத்தல். நல் வாழ்க்கை - ஜீவனத்திற்கு வேண்டிய வருவாயை நியாயமான வழிகளில் சம்பாதித்து வாழ்தல். நற்கடைப்பிடி - நல்ல உறுதியும், நன்னினைவும்; கருத் தோடு, உறுதியோடு, நினைவோடு, ஊக்கத்தோடு செயல் புரிதல். நற்காட்சி - தெளிந்த மெய்க் கட்சி, பொருள்களின் உண்மை நிலையைப் பகுத்துணர்தல்: இதற்கு எதிர் மறையானது பொய் அல்லது பொல்லாக் காட்சி, தவருண பார்வை. நற்செய்கை - கொலை, களவு, முறை தவறிய சிற்றின்ப உணர்ச்சிகளை ஒதுக்கி, நல்வினை புரிதல். நாம ருபங்கள் - ஐந்து கந்தங்களின் சேர்க்கையால் தோன்றும் அருவும் உருவும். நால்வகை (நான்கு) வாய்மைகள் - துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்கநிவாரண மார்க்கம் என்ற சத்வாரி ஆரிய (மேலான) சத்தியங்கள். நிகந்தநாத புத்தர் - ஜைன சமயத் தலைவரான மகாவிரர். நிகாயம் - தொகுதி. நிதானங்கள் - பேதைமை, ெச ய் ைக , உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, கருமத் தொகுதி, தோற்றம், வினைப்பயன் என்ற றப்புக்குக் காரணமான 12-சார்புகள். நித்தேசம் - விளக்கம். நிபாதம் - தொகுதி. நியமங்கள் - விதிகள், முறைகள். நிருவானம் - பெளத்த தருமத்தின்படி மனிதன் பெறக் கூடிய பேரின்ப நிலை. நுகர்ச்சி- புலன்களின் மூலம் பெறும் உணர்வு, வேதனை. பகவர் - பகவான், புத்தர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/14&oldid=848899" இலிருந்து மீள்விக்கப்பட்டது