பக்கம்:பௌத்த தருமம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பெளத்த தருமம் விறகு திர்ந்தவுடன் தியும் அனந்துவிடுகின்றது. ஆசைகளற்று, மனச்சாந்தி பெற்ற நிருவான நிலைக்கு இவைகளை உபமானமாகக கூறுவதுண்டு. எண்ணெய், விறகு என்பவை கருமத் தொகுதி. ஒருவன், பின்னும் அநுபவிக்கவேண்டிய கருமப் பயன் எஞ்சியிராமல் முடித்துக் தொண்ட ல், அவன் நிருவான நிலையை அடைவான அ. த் துட ன் அவனுக்குச் சம்சார பந்தம் அற்றுப்போகிறது, மேற்கொண்டு அவனுக்குப் பிறப்பில்லை. எனவே நிருவாணம் என்பது பிறவிப் பெருங் கடலைத் தாண்டிச் செல்வோர் அடையும் மறுகரையேயாகும். சுவர்க்கமும் நரகமும் எங்கோ இருப்பதாகவும், ஒவ்வொருவரும் இறந்த பிறகு அவற்றில் ஒன்றை அடைவர் என்றும் கூருமல், இந்தப் பிறவியிலேயே, இங்கேயே நிருவானம் அடைய முடியும் என்று பெளத்த த ரு ம ம் கூறுகின்றது. நிருவாணம் உபநிடதங்கள் முதலிய இந்து சமய த்திரங்கள் கூறும் முக்தி, அல்லது மோட்சம் போன்றது. நிருவானத்தைப் புத்தர் பெருமான் 'பிருமப்ராப்தி: என்றும் பிருமபூதம் என்றும் சொல்வதுண்டு. ஆசாபாசங்கள் யாவும் அகன்று மான்' என்ற ஆணவம் அறவே அழிந்து, மன விகாரங்கள் அனைத்தும் ஒடுங்கி, சகல உயிர்களிடத்தும் கருணை பெருகி, அவற்றிற்கு அப்பால் பாவ புண்ணியங்கள் பற்றிய கருத்தும் அவிந்து. சித்தத்தில் தன் சிந்தனையே யில்லாத சாந்தி நிலேயே நிருவானம் எனலாம். உடலோடு இருக்கும் பொழுதே இந்த நிலையை அடைபவர்கள், பின்னலும் உயிர் வாழ்ந்திருத்தல் கூடும். அதற்குக் காரணம் முந்திய வினைப் பயனில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/141&oldid=848903" இலிருந்து மீள்விக்கப்பட்டது