பக்கம்:பௌத்த தருமம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெளத்த தருமம்


அதுபோலவே தருமமும் தருமம் முழுவதையும் விளக்கிக் கூறிவிட முடியாது, அது சொற்கடந்தது. அதை ஒவ்வொருவரும் அநுபவத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் போன்றதுதான் நிருவாணமும். மன்னர் பிரசேன ஜித் த தா. க த ர் பெற்ற நிருவானத்தைப்பற்றி விளக்கும்படி கோரியதற்கு, கூேடிமை என்ற பிக்குணி, "ததாகதர் அதை விளக்க வில்லை!" என்றே பதில் கூறியதாக சம்யுத்தநிகாயத் தில் குறிக்கப் பெற்றுள்ளது. ததாகதர் ஏன் விளக்க வில்லை என்று கேட்டதற்கு, கூேடிமை மறுமொழியாக இரண்டு விளுக்கள் கேட்டாள். கங்கைக் கரையி லுள்ள மணல்கள் எத்தனை? கடலிலுள்ள நீர் எத்தனை படி இருக்கும்? இந்த இரண்டு விஷயங் களையும் அளந்து கணக்கிட்டுரைக்க மன்னரிடம் கணக்கர் இருக்கிருரா என்று கூேடிமை கேட்டாள். 'பகவதி, இல்லை! என்ருர் மன்னர். 'ஏன் இல்லை: என்ற கேள்விக்குப் பிரசேன ஜித், பகவதி, சமுத்திரம் ஆழமானது, அளக்க முடியாதது, கண்டறிய முடியாத ஆழமுள்ளது!" என்று பதி லுரைத்தார். கூேடிமை அந்தப் பதிலேயே ஆதார மாய்க் கொண்டு, '(மானிட வாழ்க்கைக்கு ஆதார மாகக்) குறிப்பிடப்பெறும் சடலம் என்றதிலிருந்து விடுபட்ட ததாகதர் கடலைப்போல் ஆழமுடையவ ராயும், அளக்க முடியாதவராயும், கண்டறியமுடியாத ஆழமுள்ளவராயும் இருக்கிருர்!’ என்று கூறிள்ை. உண்மையிலேயே நிருவானத்தின் தன்மையைப் பற்றி, அதை அடையப் பெருத புண் நாறும் ப.டலும், அளவினுள் அடங்கிய சிற்றறிவும் கொண் வர்கள் எவ்வாறு விளக்கிக் கூற முடியும்? புத்தபகவர் கமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/145&oldid=848912" இலிருந்து மீள்விக்கப்பட்டது