பக்கம்:பௌத்த தருமம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

பெளத்த தருமம்



பிறகு அந்தத் தூதர்கள் இருவரும் அதிபதியைக் கண்டு, சத்தியத்தின் செய்தி ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டு, வந்த வழியே திரும்பிச் செல்கின்றனர்.

இதேபோல மேலைத் திசையிலிருந்தும், வடக்குத் திசையிலிருந்தும் இரண்டு, இரண்டு தூதர்கள் வந்து, சத்தியத்தின் செய்திகளை அளித்துவிட்டுச் செல்கின்றனர்.

இவ்வாறு ஓர் உபதேசக் கதையைச் சொல்லிப் புத்தர்பிரான் கதையின் விவரங்களை ஒவ்வொன்றாக விளக்கியுரைத்ததாகச் 'சுத்த நிபாத' த்தில் கூறப்பட்டுள்ளது.

நகரம் என்பது நான்கு கந்தங்களால் அமைந்த உடல்; ஆறு வாயில்கள் என்பவை ஆறு பொறிகள்; வாயில்களின் காவலனான சேனாதிபதி மனச்சான்று; வேகமாக வந்துசென்ற தூதர்கள் அமைதியும், உள்ளுணர்வான அறிவும்; நகரின் அதிபதி மனம்; நான்கு சாலைகள் என்பவை மண், நீர், தீ, காற்று; தூதர்கள் அளித்த செய்தி நிருவாணம் பற்றியது; அவர்கள் வந்துசென்ற பாதை நற்காட்சி, நல்லூற்றம், நல் வாய்மை, நற்செய்கை. நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற் கடைப்பிடி, நல்லமைதி ஆகிய ஆரிய அஷ்டாங்க மார்க்கம்.

கரையேறும் கட்டம்

'தீக நிகாய'த்திலே காணப்பெறும் ஒரு குறிப்பு வருமாறு :

முற்காலத்திலே கடல்மீது கப்பல்விட்டுச் செல்லும் வணிகர்கள் நிலம் கண்டுபிடிக்கும் பறவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/149&oldid=1386779" இலிருந்து மீள்விக்கப்பட்டது